40,000 செல்டோஸ் கார்களை விற்பனை செய்த கியா மோட்டார்ஸ்

kia seltos suv india

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி செல்டோஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நான்கு மாதங்களுக்குள் 40,581 கார்களை விநியோகம் செய்துள்ளது. மேலும் கடந்த நவம்பர் 2019-ல் அதிகபட்சமாக 14,005 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரப்படி யுட்டிலிட்டி வாகன சந்தையில் செல்டோஸ் முதன்மையான இடத்தை கைப்பற்றியிருந்த நிலையில் தொடர்ந்து செல்டோஸ் விற்பனை அதிகரத்து வருகின்றது. பல்வேறு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் கியாவின் விற்பனை எண்ணிக்கை மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகின்றது.

செல்டோஸில் இடம்பெற்றுள்ள மூன்று என்ஜின்

இந்த காரில் பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

கியா செல்டோஸ் காரின் விலை ஜனவரி 2020 முதல் ரூ.30,000 வரை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version