கூடுதலாக 1,00,000 உற்பத்தியை அதிகரித்த மாருதி சுசூகி

மாருதி சுசூகி கார் அசெம்பிளி

ஹரியானா மாநிலத்தில் உள்ள மானசேர் ஆலையில் கூடுதலாக ஒரு அசெம்பிளி லைனை இணைத்து ஆண்டுக்கு 1,00,000 உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 9,00,000 ஆக இந்த ஆலையின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் தற்பொழுது ஆண்டுக்கு 23.5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

Maruti Suzuki

மார்ச் 2024ல் மாருதி உற்பத்தி எண்ணிக்கை 3 கோடி கடந்த நிலையில் மானசேர் தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக 95 லட்சம் எண்ணிக்கை உற்பத்தி செய்திருந்தது. இப்பொழுது கூடுதலாக ஆண்டுக்கு 1,00,000 எண்ணிக்கை இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் எர்டிகா, XL6, பிரெஸ்ஸா, வேகன் ஆர், டிசையர், சியாஸ், செலிரியோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ ஆகியவற்றை தயாரித்து வருகின்றது.

புதிய அசெம்பிளி லைன் துவக்க விழாவில், மாருதி சுசூகி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி பேசுகையில், “இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. அடுத்த 7-8 ஆண்டுகளில் எங்கள் திறனை ஏறக்குறைய இரட்டிப்பாக்கி ஆண்டுக்கு 4 மில்லியன் வாகனங்களாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்,

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவையாற்றவும், ஆண்டுக்கு 23.5 லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் எங்களது ஒட்டுமொத்த திறனை மேம்படுத்தவும் உதவும். இந்த புதிய அசெம்பிளி லைன் பணிச்சூழலியல் மேம்படுத்தும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் மற்றும் கண்டறியும் திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்கிறது.