Automobile Tamilan

21 லட்சம் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி – FY2023-2024

maruti car

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6 % வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த FY23-24 ஆண்டில் 17.59 லட்சம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 33,763 இலகுரக வர்த்தக வாகனம் அத்துடன் டொயோட்டா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 58,612 வாகனங்கள் மற்றும் சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.83 லட்சம் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 21,35,323 யூனிட்கள் விற்பனையாகிள்ளது.  கடந்த 22-23 ஆம் நிதியாண்டில் 19,66,164 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் துவக்க நிலை சந்தை மாடல்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களின் மீதான ஆர்வம் குறைந்து வருவதனால் 6 % வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், இந்நிறுவனம் யூட்டிலிட்டி வாகன சந்தையில் பிரெஸ்ஸா, ஃபிரான்க்ஸ் உட்பட கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட மாடல்களுடன்  எர்டிகா, இன்விக்டோ ஆகியவற்றின் மூலம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

கடந்த 2024 மார்ச் மாத விற்பனையில் மாருதி முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 1,39,952 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 1,61,304 யூனிட்களாக பதிவு செய்து15.26 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version