எர்டிகா அடிப்படையில் மின்சார காரை வெளியிடும் மாருதி சுசுகி

ertiga

மாருதி சுசுகி கார் தயாரிப்பாளரின் இரண்டாவது மின்சார கார் மாடலை எர்டிகா அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக வேகன்ஆர் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

எம்பிவி ரக 7 இருக்கை பெற்ற எர்டிகா கார் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், தனிநபர் மற்றும் டாக்சி சந்தையிலும் பிரபலமாக விளங்கி வருகின்றது. இந்த மாடலை கொண்டு இரண்டாவது எலெக்ட்ரிக் காரினை தயாரிப்பதனால் தனிநபர் சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெறும் என மாருதி எதிர்பார்க்கின்றது.

எர்டிகா அடிப்படையில் உற்பத்தி செய்யபட உள்ள மாடல் மாறுபட்ட பிராண்டின் பெயரில் வெளியிடப்படக்கூடும். இந்தியாவிற்கும் சர்வதேச சந்தைகளுக்கும் மலிவு விலையில் பலவேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய சுசுகி-டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. குஜராத்தில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலையில் கூட்டாக முதலீடு செய்ய சுசுகி தோஷிபா கார்ப் மற்றும் டொயோட்டா டென்சோ கார்ப் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

மத்திய பட்ஜெட் 2019-யில் தற்போதைய ஜிஎஸ்டி வரி 12% முதல் 5% வரை குறைக்கப்பட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் தீவர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

[Source – LiveMint]

Exit mobile version