Automobile Tamilan

25 ஆண்டுகளில் 32 லட்சம் கார்கள்.., மாருதி சுசூகி வேகன் ஆர்..!

Maruti Suzuki wagon r

டால்பாய் ஹேட்ச்பேக் என அழைக்கப்படுகின்ற பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 32 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.

குறிப்பாக தற்பொழுதும் இந்த கார் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது விற்பனையில் அதே நேரத்தில் இந்த காரினை வாங்குபவர்களுக்கு முதல்முறை வாங்குபவர்களாகவே அதிகம் உள்ளனர். குறிப்பாக 44 சதவீதம் பேர் இந்த காரை முதன்முறையாக தேர்ந்தெடுப்பவர்களாகவே உள்ளனர் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் ஆனது தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை சந்தித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மாடலானது இரண்டு விதமான எஞ்சின் ஆப்சனை தற்பொழுது பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என இரண்டு விதமான ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் மற்றும் சிஎன்ஜி முறையிலும் கிடைக்கின்றது.

பெட்ரோல் MT 24.35 km/l, பெட்ரோல் AGS 25.19 km/l மற்றும் CNG 33.47 km/kg என மூன்றிலும் உள்ள 1.0லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைலேஜ் ஆகும். அடுத்து, 1.2 லிட்டர் என்ஜின் தேர்வில் MT 23.56 km/l  மற்றும் AGS 24.43 km/l ஆக உள்ளது.

கடந்த FY22, FY23, FY 24 என மூன்று நிதியாண்டிலும் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை வேகன் ஆர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. விற்பனை செய்யப்பட்ட 32 லட்சம் கார்களில் சுமார் 6.60 லட்சம் கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனை பெற்றதாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version