Automobile Tamilan

₹ 29.50 லட்சத்தில் நியூ ஹாலண்ட் வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது

New Holland Workmaster 105 tractor

100+HP பிரிவில் இந்தியாவில் பாரத் TREM-IV அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ரூ.29.50 லட்சம் விலையில் நியூ ஹாலண்ட் வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

CNH  கீழ் செயல்படுகின்ற நியூ ஹாலண்ட் நிறுவனத்தின் வொர்க்மாஸ்டர் டிராக்டரில் உள்ள சக்திவாய்ந்த என்ஜின் அதிகபட்சமாக 106 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், மிக குறைந்த பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் 600 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஆயில் மாற்றும் வகையில் உள்ள 3.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் (4WD) பெற்றுள்ள வொர்க்மாஸ்டரில் 3500 கிலோ கிராம் எடையை லிஃப்ட் செய்ய இயலுவதுடன் மிக சிறப்பான வகையில் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற  power take off (PTO) இடம்பெற்றுள்ளது.

அதிகப்படியான நேரம் உழைக்கும் வகையிலான டிராக்டர் தேடுபவர்களுக்கும், அதிக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, பேலர்கள் மற்றும் தீவன அறுவடை இயந்திரங்கள் போன்ற மேம்பட்ட உபகரணங்களை இயக்கும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் சரியானது என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்திய சந்தையில் 20 முதல் 110 குதிரைத்திறன் கொண்ட டிராக்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

மேலும் பல்வேறு கட்டுமானம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது.

Exit mobile version