Automobile Tamilan

ஆப்பிள் கார் பிளே புதிய மேம்பாடுகளின் சிறப்பு அம்சங்கள் என்ன..!

apple carplay

முற்றிலும் புதுப்பிக்கபட்ட பல்வேறு நவீன தலைமுறை அம்சங்களை ஆதரிக்கவும், கார் தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப்பிள் கார் பிளே ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் போர்ஷே மற்றும் ஆஸ்டன் மார்டின் கார்களில் முதற்கட்டமாக இடம்பெற உள்ளது.

முதன்முறையாக 2014 ஆம் ஆண்டு ஃபெராரி FF காரில் முதன்முறையாக வந்த கார் பிளே சிஸ்டம் இப்பொழுது அகலமான திரை, பல்வேறு நவீன அம்சங்கள் என விரிவடைந்து வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய தலைமுறை கார் பிளே சிறப்பானதாக இருக்கும் என தான்யா காஞ்சேவா, ஆப்பிள் நிறுவனத்தின் கார் பிரிவு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறை கார்ப்ளே வயர்லெஸ் முறையில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மாடலுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட UI உட்பட ஏசி சார்ந்த கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்களை வழங்குகின்றது.

ADAS சார்ந்த அம்சங்கள் மேம்பாடு மற்றும் நவீனத்துவமான வசதிகள் டிரைவருக்கான பல்வேறு உதவி அமைப்புகள், அறிவிப்புகள் என பலவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.  இந்த ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ள அடுத்த தலைமுறை கார் பிளே பல்வேறு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு முதல் வழங்க துவங்கலாம்.

 

 

Exit mobile version