Automobile Tamilan

இந்தியாவில் நிசான் லீஃப் மின்சார் கார் களமிறங்குகின்றதா ?

2030 ஆண்டிற்குள் முழுமையான எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற கொள்கையை செயல்பாட்டுக் கொண்டு வரவுள்ள  நமது நாட்டில் நிசான் லீஃப் மின்சார காரை நிசான் அறிமுகம் செய்யவதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

நிசான் லீஃப்

ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு வளர்ந்த சந்தைகளில் மிகுந்த வரவேற்பினை பெற்ற நிசான் நிறுவனத்தின் முழுமையான மின்சார் கார் மாடலாக விளங்கும் நிசான் லீஃப் காரை இந்திய சந்தையில் இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

107 பிஹெச்பி பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தக்கூடிய மின்சார மோட்டார் என்ஜினை பெற்ற லீஃப் கார் ஒரு முழுமையான பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 170 கிமீ தொலைவு வரை பயணிக்க வகையிலான செயல்திறனை வெளிப்படுத்தும்.

வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள புதிய தலைமுறை லீஃப் மீன்சார காரை அடிப்படையாக கொண்ட மாடலே இந்திய சந்தையிலும் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது. இந்த காரில் 60kwh பேட்டரி திறனுடன் அதிகபட்சமாக 300 கிமீ வரை பயணிக்கும் வகையில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது நமது நாட்டில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் மாடல்களான இ2ஓ ப்ளஸ், இ-வெரிட்டோ மற்றும் சுப்ரோ போன்றவையே அடிப்படை சந்தைக்கு ஏற்ற மாடல்களாக விளங்கி வருகின்றது.

Exit mobile version