Automobile Tamilan

இந்தியாவின் முதல் நிஃப்டி EV & New Age Automotive indexயை துவங்கிய தேசிய பங்குச் சந்தை

nse hq

பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மாருதி என சுமார் 34 பங்குகளை உள்ளடக்கிய மின்சார வாகனம் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்கான Nifty EV & New Age Automotive index என்ற பெயரில் தனி குறீயிடு தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) நிறுவனம் துவங்கியுள்ளது.

நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி போன்ற இன்டெக்ஸ் போல ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிஃப்டி ஆட்டோ உள்ள நிலையில் பிரத்தியேகமாக மின்சார வாகனங்கள் மற்றும் அதன் சார்ந்த பேட்டரி, உதிரிபாகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கியதாக நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இன்டெக்ஸ் துவங்கப்பட்டுள்ளது.

எதிர்காலம் மின்சார வாகனங்கள் என்ற நிலையை நோக்கி நகரும்  நிலையில் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை மிக எளிமையாக மின்சார ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சியை இண்டெக்ஸ் மூலம் அறியலாம்.

Nifty EV & New Age Automotive indexல் அதிகபட்ச மதிப்பை பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. நிறுவனங்களின் பட்டியல் பின் வருமாறு ;-

அதிக மதிப்புள்ள பங்குகளிள் படத்தில் உள்ள அட்டவனையில் உள்ளது.

 

Exit mobile version