9.13 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த ராயல் என்ஃபீல்டு

eicher-first-electric-truck

உலகின் முன்னணி நடுத்தர மோட்டார்சைக்கிள் (250cc-750cc) பிரிவின் தலைவராக உள்ள ராயல் என்ஃபீல்டு FY23-24 ஆம் ஆண்டில் 912,732 இரு சக்கர வாகனங்கள் விற்றுள்ள நிலையில் முந்தைய நிதியாண்டில் 834,895 யூனிட்களாக விற்பனை பதிவு செய்துள்ளதால் 9 % வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் 350சிசி பைக்குகள் பிரிவில் உள்ள மாடல்களின் மூலம் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 90 % வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராயல் என்ஃபீல்டு மார்ச் 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 72,235 யூனிட்களிலிருந்து 5% அதிகரித்து 2024 மார்ச்சில் 75,551 யூனிட்டுகளாக விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஏற்றுமதி மார்ச் மாதம் 23 % சரிவடைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனம் ஐஷர் மோட்டார்ஸ்  FY23 இல் விற்பனை செய்யப்பட்ட 79,623 யூனிட்களில் இருந்து 7.5% அதிகரித்து 23-24 ஆம் நிதியாண்டில் 85,560 யூனிட்களாக VECV பதிவு செய்துள்ளது.

மேலும் வால்வோ ஐஷர் உள்நாட்டு விற்பனை 6.6% சரிந்து 10,525 யூனிட்டுகளாக இருந்தது, மொத்த ஏற்றுமதிகள் மார்ச் 2023 விட மார்ச் 2024 இல் 11.4% உயர்ந்து 461 யூனிட்டுகளாக உள்ளது.

மார்ச் 2024 மாதத்தில் வால்வோ டிரக்குகள் மற்றும் பேருந்துகளின் மொத்த விற்பனை 11.8% அதிகரித்து 2023 மார்ச் மாதத்தில் 229 யூனிட்களாக இருந்ததில் இருந்து 256 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.