சர்வதேச அளவில் நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் (250-750 cc) சந்தையில், மிக சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிய நுட்பங்கள் மற்றும் மாடல்கள், வெளிநாடுகளில் ஆலையை அமைப்பதற்கு என மொத்தமாக ரூ. 800 கோடி முதலீட்டை என்ஃபீல்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் சிஇஓ சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.
2018-2019 ஆம் நிதி ஆண்டில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் , பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், குறிப்பாக சமீபத்தில் இந்நிறுவனம் சென்னை அருகே உள்ள வல்லம் வடகல் மூன்றாவது தொழிற்சாலையை தொடங்கியதை தொடர்ந்து இந்த ஆலையின் இரண்டவாது உற்பத்தி பிரிவினை கட்டமைக்க தொடங்கியுள்ளதால், இந்த பிரிவு முழுமையான உற்பத்தி திறனை எட்டும்போது , ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9.50 லட்சம் மோட்டார்சைக்கிள்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சென்னையில் இந்நிறுவனம் முழுமையான மற்றும் எதிர்கால தொழிற்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மையத்தை இந்த வருட இறுதிக்குள் கட்டமைக்க உள்ள நிலையில், கூடுதலாக இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஐஷர் மோட்டார்ஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் கூறுகையில் எங்களது மோட்டார்சைக்கிள் விநியோகத்தைத் தாண்டியும் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரிக்கின்றது, மேலும் எங்கள் எல்லா சந்தையிலிருந்தும் வலுவான வளர்ச்சியை தொடர்ந்து பார்க்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள வள்ளம் வடகல் ஆலையின் இரண்டாவது பிரிவினை கட்டமைத்து, நமது உற்பத்தி திறனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு சென்னையில் எங்கள் தொழில்நுட்ப மையத்தை கட்டி முடிப்போம், வரவிருக்கும் ஒழுங்குமுறைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய தயாரிப்புகளின் மேம்பாட்டில் மேலும் முதலீடு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களது புதிய தண்டர்பேர்டு X, கிளாசிக் கன்மெட்டல் பிரே. ஸ்டெல்த் பிளாக் மற்றும் ரெட்டிச் சீரீஸ் போன்றவை சிறப்பான ஆதரவை கொண்டு விளங்குகின்ற நிலையில், எங்களுடைய புதிய இரட்டையர்களான 650சிசி இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டினல் ஜிடி ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட நுட்பங்களை தொடர்ந்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எட்டியதை தொடர்ந்து ஸ்டைலான அதிகாரத்தை குறிக்கும் வகையில்…
சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில்…
6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டுள்ள பிஓய்டி நிறுவனத்தின் eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 55.4kwh மற்றும் 71.8Kwh…
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…