Categories: வணிகம்

செப்டம்பர் மாதம் விற்பனையில் டாப் 10 கார்கள் – 2017

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மோட்டார் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 2017-ல் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2017

இந்தியர்களின் மிக விருப்பமான மாருதி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்த 6 மாதங்களுக்குள் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாத முடிவில் மொத்தம் 31,427 கார்கள் விற்பனை செய்யப்பட்டு முதன்மையான மாடலாக பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி ஆல்டோ, மாருதி பலேனோ, மாருதி வேகன் ஆர், மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்கள் தொடர்ந்து பல மாதங்களாக முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகின்றது.

மாருதியின் போட்டியாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் க்ரீட்டா எஸ்யூவி ஆகிய மாடல்களும் பட்டியில் இடம்பெற்றுள்ளது.

இவைதவிர , இந்தியாவின் முதன்மையான ஆல்டோ காருக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ள ரெனோ க்விட் கார் பட்டியில் 10வது இடத்தை கைப்பற்றியுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – செப்டம்பர் 2017
வ. எண் தயாரிப்பாளர் செப்டம்பர் – 2017
1. மாருதி சுசூகி டிசையர் 31,427
2. மாருதி சுசூகி ஆல்டோ 23,830
3. மாருதி சுசூகி பலேனோ 16,238
4. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,649
5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 14,099
6. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 13,628
7. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 13,193
8. ஹூண்டாய் எலைட் ஐ20 11,574
9. ஹூண்டாய் க்ரெட்டா 9292
10. ரெனோ க்விட் (Automobile Tamilan) 9099