நவம்பர் 2019 விற்பனையில் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் ஸ்விஃப்ட்

kia seltos suv car

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் நவம்பர் 2019 விற்பனையில் டாப் 10 கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக கியா செல்டோஸ் மற்றும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ என இரு மாடல்களும் அமோகமான வரவேற்பினை பெற்று வருகின்றது.

நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளரான மாருதி சுசுகி உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. ஆனால், ரெனோ இந்தியா, கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களுடன் வோக்ஸ்வேகன் மற்றும் ஹூண்டாய் மிக குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாப் 10 கார்களில் 7 இடங்களை மாருதி சுசுகி நிறுவனமும், ஹூண்டாய் இரு இடங்களையும், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் 14,005 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு பட்டியிலில் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்து, மாருதியின் புதிய மாடலான எஸ்-பிரெஸ்ஸோ பட்டியலில் 11,420 யூனிட்டுகள் விற்பனை செய்து டாப் 10 கார் பட்டியிலில் 8வது இடத்தில் உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் –  நவம்பர் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் நவம்பர் 2019
1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 19,314
2. மாருதி சுசூகி பலேனோ 18,047
3. மாருதி சுசூகி டிசையர் 17,659
4. மாருதி சுசூகி ஆல்ட்டோ 15,086
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,650
6. கியா செல்டோஸ் 14,005
7. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 12,033
8 மாருதி சுசூகி  எஸ்-பிரெஸ்ஸோ 11,420
9. ஹூண்டாய் எலைட் ஐ20 10,279
10. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,186

Exit mobile version