Automobile Tamilan

விற்பனையில் தொடர்ந்து மாருதி முன்னிலை டாப் 10 கார்களின் பட்டியல் – ஏப்ரல் 2019

e26f6 2019 maruti suzuki alto

கடந்த ஏப்ரல் 2019 மாதந்திர விற்பனையில் இந்தியாவில் டாப் 10 இடங்களை பெற்ற கார்கள் பட்டியலில் முதலிடத்தை மாருதி சுசுகி நிறுவன ஆல்ட்டோ இடம்பெற்றுள்ளது. முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி நிறுவன மாடல்கள் பெற்றுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் மாத பயணிகள் வாகன விற்பனை சந்தை மிகப்பெரிய சரிவினை சந்தித்துள்ளது. குறிப்பாக மாருதி முதல் பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை சரிவை கண்டிருக்கின்றது. இந்தியாவின் ஹோண்டா கார் பிரிவு மட்டும் மாதந்திர விற்பனையில் ஒப்பீடும்போது வளர்ச்சி கண்டுள்ளது.

டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2019

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் 6 கார்கள் பட்டியிலில் இடம்பெற்றிருந்தாலும் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் விற்பனையில் ஒப்பீடும் போது எண்ணிக்கை சரிவில் மட்டும் உள்ளது. குறிப்பாக டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25,935 ஆக இருந்த நிலையில் இந்த 28 சதவீதம் சரிந்து ஏப்ரல் 2019-ல் 18,544 ஆக பதிவு செய்துள்ளது.

ஆனால் எஸ்யூவி ரக கார் மாடலாக விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் க்ரெட்டா கார்கள் சீரான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. மாருதி சுசுகி ஈக்கோ காரின் விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆம்னி வேன் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஈக்கோ வேன் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2019 முழு அட்டவனை

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் ஏப்ரல் 2019
1. மாருதி சுசூகி ஆல்டோ 22,766
2. மாருதி சுசூகி டிசையர் 18,544
3. மாருதி சுசூகி பலேனோ 17,355
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 15,776
5, மாருதி சுசூகி  விட்டாரா பிரெஸ்ஸா 11,785
6. மாருதி சுசூகி வேகன்ஆர் 11,306
7. ஹூண்டாய் க்ரெட்டா 10,487
8 ஹூண்டாய் எலைட் ஐ20 10,411
9. மாருதி சுசுகி ஈக்கோ 10,254
10. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9,610

 

Exit mobile version