Home Auto Industry

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2017

கடந்த மார்ச் மாத இந்திய இருசக்கர வாகன விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த பைக்குளின் பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது.

டாப் 10

  • ஹோண்டா ஆக்டிவா இந்தியாவின் நெ.1 இருசக்கர வாகனமாக உருவெடுத்துள்ளது.
  • முதல் 10 இடங்களில் ஹீரோ நிறுவனத்தின்  5 மாடல்கள் இடம் பிடித்துள்ளது.
  • ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் 10வது இடத்தில் உள்ளது.

இருசக்கர வாகன விற்பனையில் இந்தியாவின் முதன்மையான வாகனம் என்ற பெயரை ஹோண்டா ஆக்டிவா பெற்றுள்ளது. பல வருடங்களாக முன்னிலை வகித்து வந்த ஸ்பிளென்டர் பைக்கை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஸ்கூட்டர் சந்தையின் அபரிதமான வளர்ச்சி ஹோண்டா நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாகவே அமைந்துள்ளது. மேலும் இரண்டாவது ஸ்கூட்டர் தயாரிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் விளங்குகின்றது. ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் பிரிவில்மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டாப் 10 பைக்குகள் – மார்ச் 2017

வ.எண்  மாடல் விபரம் மார்ச் 2017
1 ஹோண்டா ஆக்டிவா 2,39,239
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,08,571
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,37,712
4 ஹீரோ பேஸன் 85,166
5 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் 69,773
6 ஹோண்டா CB ஷைன் 68,328
7 டிவிஎஸ் ஜூபிடர் 60,202
8 ஹீரோ கிளாமர் 58,912
9 ஹீரோ மேஸ்ட்ரோ 42,103
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39,973

இதுகுறித்து நமது மோட்டார் டாக்கீஸ் ஃபோரம் பகுதியில் கலந்துரையாட வாருங்கள்…. பைக்குகள்

Exit mobile version