Automobile Tamil

2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 பைக்குகள்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான சிறந்த 10 பைக்குகள் பற்றி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது.

சிறந்த 10 பைக்குகள் – 2018

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது இந்திய சந்தையில் ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வெளியாக தொடங்கியுள்ளது.

1 . ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா , இந்தியாவின் நெ.1 டூ-வீலர் என்ற பெருமையை பெற்று விளங்குகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் சுமார் ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 30,93,481 ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விலை ரூ.56,621 முதல் ரூ.58,486 ஆகும்.

2. ஹீரோ ஸ்பிளென்டர்

நாட்டின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பைக் விற்பனை எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் ஸ்பிளென்டர் விற்பனை எண்ணிக்கை 30,00,278 ஆக பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் உள்ள ஆக்டிவா மாடலை விட சுமார் 93,203 யூனிட்டுகள் மட்டுமே குறைவாகும்.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக் விலை ரூ.49,160 முதல் ரூ.56,550 ஆகும்.

3. ஹீரோ HF டீலக்ஸ்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் மிக சிறப்பான வரவேற்பினை கொண்டு விளங்கும் மாடல்களில் ஒன்றாகும். கடந்த 2018-ல் HF டீலக்ஸ் விற்பனை எண்ணிக்கை 21,13,045 ஆகும்.

ஹீரோ HF டீலக்ஸ் பைக் விலை ரூ.49,800 முதல் ரூ.49,496 ஆகும்.

4. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி சந்தையில் சிறந்து விளங்கும் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் விற்பனை எண்ணிக்கை 10,21,800 ஆக பதிவு செய்துள்ளது. இதில் சிபி ஷைன் எஸ்பி மாடலும் அடங்கும்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் விலை ரூ. 60246 முதல் ரூ. 69,902 ஆகும்.

5. ஹீரோ பேஸன்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ பேஸன் பைக் மாடல் விற்பனை எண்ணிக்கை 9,68,354 ஆக உள்ளது.

ஹீரோ பேஸன் பைக் விலை ரூ. 53,975 முதல் ரூ. 57,800 ஆகும்.

6. டிவிஎஸ் XL 100

இந்த டாப் 10 பைக்குகள் பட்டியில் இடம்பெற்றுள்ள ஒரே மொபட் மாடாலாக விளங்கும், டிவிஎஸ் மோட்டாரின் எக்ஸ்எல் 100 அமோக ஆதரவை 2018-ல் பெற்றுள்ளது. டிவிஎஸ் XL 100 விற்பனை எண்ணிக்கை 8,81,640 ஆகும். சமீபத்தில் எக்ஸ்எல்100 மாடலில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் XL 100 பைக் விலை ரூ. 30,329 முதல் ரூ.38,079 ஆகும்.

7. டிவிஎஸ் ஜூபிடர்

2018 ஆம் ஆண்டின் சிறந்த டூ-வீலர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை  8,16,994 ஆக உள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விலை ரூ.55,594 முதல் ரூ.64,454 ஆகும்.

8. ஹீரோ கிளாமர்

125சிசி சந்தையில் இடம்பெற்றுள்ள பைக்குகளில் அமோக வரவேற்பினை பெற்ற இரண்டாவது மாடலான ஹீரோ கிளாமர் பைக் , நடந்து முடிந்த 2018 காலண்டர் வருடத்தில் ஹீரோ கிளாமர் விற்பனை எண்ணிக்கை 7,82,675 ஆக உள்ளது. இந்த பட்டியலில் 8 வது இடத்தை பெற்றுள்ளது.

ஹீரோ கிளாமர் பைக் ரூ.59,700 ஆரம்ப விலை ஆகும்.

9. பஜாஜ் சிடி100

பஜாஜின் பட்ஜெட் விலை டூ-வீலர் மாடலாக விளங்குகின்ற பஜாஜ் சிடி 100 பைக் 2018-ல் சுமார் 6,97,842 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் சிடி 100 பைக் விலை ரூ. 32,704 முதல் ரூ.35,347 ஆகும்.

10. பஜாஜ் பல்சர் 150

பஜாஜ் ஆட்டோவின் மற்றொரு மாடலான பிரசத்தி பெற்ற பல்சர் 150 பைக் 2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 பைக்குகள் பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் பல்சர் 150 விற்பனை எண்ணிக்கை 5,70,786 ஆகும்.

பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.78,528 முதல் தொடங்குகின்றது.

சிறந்த டாப் 10 பைக்குகள் – 2018

வ.எண் மாடல் 2018
1 ஹோண்டா ஆக்டிவா 30,93,481
2 ஹீரோ ஸ்பிளென்டர் 30,00,278
3 ஹீரோ HF டீலக்ஸ் 21,13,045
4 ஹோண்டா CB ஷைன் 10,21,800
5 ஹீரோ பேஸன் 9,68,354
6 டிவிஎஸ் XL சூப்பர் 8,81,640
7 டிவிஎஸ் ஜூபிடர் 8,16,994
8 ஹீரோ கிளாமர் 7,82,675
9 பஜாஜ் சிடி100 6,97,842
10 பஜாஜ் பல்சர்  5,70,786

 

 

Exit mobile version