Site icon Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018

ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளென்டர் என இரண்டு வாகனங்களும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் , கடந்த 2018 மே மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களை டாப் 10 பைக்குகள் -மே 2018 பட்டியிலில் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 பைக்குகள் – மே 2018

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் மீதான மோகம் ஒருபுறமிருக்க , பைக்குகள் மீதான மோகம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் இந்த நிதி ஆண்டில் இரண்டாவது புறையாக மாதந்திர பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளி ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தை பெற்று விளங்குகின்றது.

இந்த பட்டியலில் 125சிசி ரகத்தில் ஹோண்டா சிபி ஷைன் தொடர்ந்து அபரிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது. கடந்த மே மாத விற்பனையில் 99,812 யூனிட்டுகள் விற்பனையாகி முதல் 10 இடங்களில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. இந்த பைக்கின் போட்டியாளரான ஹீரோ கிளாமர் 72,102 யூனிட்டுள் விற்பனை ஆகியுள்ளது.

பஜாஜ் பல்சர் தொடர்ந்து இந்திய இளைஞர்களின் கனவு பைக் மாடல்களில் ஒன்றாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றது. மே மாத முடிவில் 70,056 யூனிட்டுகள் விற்பனை செயப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து டிவிஎஸ் எக்எல் சூப்பர் மற்றும் ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவாக்கு சவால் விடுக்கும் டிவிஎஸ் ஜூபிடர் 58,098 யூனிட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 மே மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

டாப் 10 பைக்குகள் – மே 2018

வ.எண் மாடல் மே 2018 ஏப்ரல் 2018
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,80,763 2,66,067
2 ஹோண்டா ஆக்டிவா 2,72,475 3,39,878
3 ஹீரோ HF டீலக்ஸ் 184,431 1,72,340
4 ஹோண்டா CB ஷைன் 99,812 1,04,048
5 ஹீரோ பேஸன் 96,389 95,834
6 டிவிஎஸ் XL சூப்பர் 73,067  67,708
7 ஹீரோ கிளாமர் 72,102 69,900
8  பஜாஜ் பல்சர் வரிசை 70,056 67,712
9 பஜாஜ் CT 100 64,622 59,944
10 டிவிஎஸ் ஜூபிடர் 58,098 56,599

 

Exit mobile version