ஆட்டோமொபைல் துறையில் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்

2019-maruti-suzuki-Baleno-RS

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 2 லட்சம் பேர் ஆட்டோமொபைல் துறையில் வேலை இழந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு (FADA) அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள தகவலின்படி நேரடியாக ஆட்டோமொபைல் டீலர்கள் சார்ந்த துறையில் 15,000 டீலர்களால் இயக்கப்படும் சுமார் 26,000 ஆட்டோமொபைல் ஷோரூம்களில் சுமார் 25 லட்சம் மக்கள் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மறைமுகமாக டீலர்கள் மூலம் மேலும் 25 லட்சம் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி மற்றும் பல்வேறு நிதி சார்ந்த சிக்கல்களால் தொடர்ந்து இந்திய மோட்டார் வாகன சந்தை கடுமையான சரிவினை எதிர்கொண்டு வருகின்றது. அடுத்தப்படியாக, மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் வேலை நபர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த 18 மாத காலப்பகுதியில் 271 நகரங்களில் 286 ஷோரூம்கள் மூடப்பட்டதால் நேரடியாக வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 32,000 பேருக்கு கூடுதலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரிவு தொடரும் எனில் மேலும் லட்சகணக்கானோர் வேலை இழக்க நேரிடும் என கூறப்படுகின்றது. முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம், விற்பனை சரிவினால் தனது 6 சதவீத தற்காலிக ஊழியர்களை நீக்கியுள்ளது. இனி வரும் நாடுகளில் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் வேலை இழப்பு அதிகரிக்கலாம்.

Exit mobile version