Automobile Tamilan

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

vinfast electric india plan 1

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலையில் தற்பொழுது மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் மின்சார பேருந்துகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது VF6, VF7 என இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் 7 இருக்கை லிமோ க்ரீன் என்ற மாடலை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிட உள்ளது.

Vinfast India Future Plans

இந்திய சந்தையில் ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொண்டுள்ள நிலையில் நம் தமிழ்நாட்டின் உள்ள தூத்துக்குடியின் ஆலையில் கார் மட்டுமல்லாமல் மின்சார பேருந்து, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

7 இருக்கை பெற்ற மாடலாக வரவிருக்கும் லிமோ க்ரீன் (Limo Green) ஆனது ஏற்கனவே சந்தையில் உள்ள காரன்ஸ் கிளாவிஸ் எலக்ட்ரிக் உட்பட பிஓய்டி eMax 7 என இரு மாடல்களை எதிர்கொள்வதுடன் 60.1 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை பெற்றுள்ள நிலையில் முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 450 கிமீ (NEDC) வரை செல்லும் திறன் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் உள்ள மோட்டார் மூலம் சுமார் 201 bhp பவரையும், 280 Nm டார்க்  திறனையும் வெளிப்படுத்தும் நிலையில் சார்ஜிங்: ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) மூலம் 10% முதல் 70% சார்ஜை வெறும் 30 நிமிடங்களில் எட்டிவிடும்.

பிப்ரவரி 2026ல் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த காரின் விலை சுமார் ₹20 லட்சம் முதல் ₹28 லட்சத்துக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Vinfast Electric Bus

தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் மின்சார பேருந்து தயாரித்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் அல்லது அதற்கு பிறகு நாட்டின் முன்னணி போக்குவரத்து கழகங்களுக்கு விற்பனைக்கு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் 6-12 மீட்டர் வரை நீளமுள்ள பேருந்துகளை வியட்நாம், ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்து வரும் நிலையில், இதில் 281 kWh பேட்டரி பேக் பொறுத்தப்பட்டு அதிகபட்ச ரேஞ்ச் 260கிமீ வரை கிடைக்கலாம்.

முதற்கட்டமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களின் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinfast Electric Scooters

ஏற்கனவே, பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025யில் முதன்முறையாக இந்திய சந்தையில் 5 மின்சார ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்திய நிலையில் Klara S, Theon S, Feliz S, Vento S மற்றும் Evo 200 என 5 மாடல்களை கொண்டு வந்தது. இவை பொதுவாக 3.5 kWh LFP பேட்டரியை பெற்று முழுமையான சார்ஜில் ரேஞ்ச் ஆனது 190-210 கிமீ வரை ஈக்கோ மோடில் வழங்குவதுடன் மணிக்கு அதிகபட்ச வேகம் 70 முதல் 90 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது.

2026ல் மத்தியில் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூட்டர்களை முதற்கட்டமாக வெளியிட வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் முன்னணி டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ விடா, ஓலா உள்ளிட்ட பல்வேறு டூ வீலர் தயாரிப்பாளர்களுக்கும் சவால் விடுக்க உள்ளது.

மேலும் வின்ஃபாஸ்ட் குழுமத்தின் ஜிஎஸ்ம் எனப்படுகின்ற டாக்ஸி சர்வீஸில் முழுவதும் இந்நிறுவன எலக்ட்ரிக் கார்களை மட்டுமே, பயன்படுத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், முமற்கட்டமாக இந்நிறுவனம் லிமோ க்ரீன் 7 இருக்கை மாடல்களையே பயன்படுத்தி துவங்க உள்ள நிலையில், கார் ஓட்டும் டிரைவர்கள், பயணிகளிடம் காரின் சிறப்பம்சங்களை எடுத்துச் சொல்லி விற்பனைக்கும் உதவும் வகையில் தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

Exit mobile version