வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்கள் (VECV) பிரிவு ஒட்டு மொத்தமாக முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 6.5 % வளர்ச்சி அடைந்து 6,715 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆண்டு ஜூன் 2022-ல் ஒட்டுமொத்தமாக 6,307 ஆக பதிவு செய்திருந்தது. ஜூன் 2023-ல் வால்வோ பிராண்டில் 188 வாகனங்களும், ஐஷர் பிராண்டில் 6,527 ஆக பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு வர்த்தக வாகன சந்தையில், ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் ஜூன் 2022 இல் 5,584 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஜூன் 2023 இல் 6,277 யூனிட்களை பதிவு செய்துள்ளன, இது 12.4% வளர்ச்சியை அடைந்துள்ளது.
வால்வோ டிரக்குகள் மற்றும் வால்வோ பேருந்துகள் ஜூன் 2022-ல் 122 யூனிட்களை விற்பனை செய்ததில், ஜூன் 2023-ல் 188 யூனிட்களை விற்பனை செய்துள்ளன, இது 54.1% வளர்ச்சியை பெற்றுள்ளது.