ஃபியட் அபார்த் புன்ட்டோ கார் விரைவில்

அபார்த் பிராண்டில் ஃபியட் புன்ட்டோ பெர்ஃபாமென்ஸ் மாடலாக உயர்த்தியுள்ளது. ஃபியட் அபார்த் புன்ட்டோ கார் பெர்ஃபாமென்ஸ் மாடல் தீபாவளிக்கு முன்னதாக சந்தைக்கு வரலாம்.
ஃபியட் அபார்த் புன்ட்டோ
ஃபியட் அபார்த் புன்ட்டோ

ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் காரின் அறிமுக விழாவில் அபார்த் பிராண்டில் புன்ட்டோ காரை 145பிஎச்பி ஆற்றலை தரும் வகையில் என்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

புன்ட்டோ மாடலில் உள்ள தோற்ற அமைப்பில் மாறுதல்கள் இல்லையென்றாலும் கவர்ந்திழுக்கும் தோற்றத்தினை அபார்த் புன்ட்டோ பெற்றுள்ளது. புதிய ஸ்கார்ப்பியன் ஆலாய் வீல் மற்றும் அபார்த் ஸ்டிக்கரிங்கை பெற்றுள்ளது. ஃபியட் லோகோவிற்க்கு பதிலாக அபார்த் லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் அபார்த் முத்திரை பதிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் , கருப்பு நிற கேபின் , ஃபேபரிக் அப்ஹோல்சரி , சிகப்பு மற்றும் மஞ்சள் கலவை , அலுமினிய பெடல்கள் என சில மாற்றங்களை கண்டு பெர்ஃபாமென்ஸ் மாடலாக மாறியுள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள புன்ட்டோ 90பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டி – ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே என்ஜினை 145பிஎச்பி தரும் வகையில் ஆற்றலை அதிகரித்துள்ளது.

ஃபியட் அபார்த் புன்ட்டோ

ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் மாடலை போலோ அபார்த் புன்ட்டோ மாடலும் பெர்ஃபாமென்ஸ் ரகத்தில் நுழைந்துள்ளது. மேலும் ஃபியட் அவென்ச்சர் மாடலும் அபார்த் பிராண்டில் விற்பனைக்கு வரலாம்.

ஃபியட் அபார்த் புன்ட்டோ காரின் விலை ரூ.10 லட்சத்தில் இருக்கலாம். வரும் பண்டிகை காலத்திற்க்கு முன்னதாக சந்தைக்கு வரவுள்ளது.

Fiat Abarth Punto Unveiled In India

Exit mobile version