Automobile Tamilan

ஃபியட் லீனியா டி-ஜெட் மீண்டும் களமிறங்குகிறது

ஃபியட் நிறுவனம் இந்திய சந்தையில் தனியிடத்தை பிடிக்கும் நோக்கில் வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஃபியட் லீனியா டி-ஜெட் வரும் ஜூன் மாதம் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது.

 ஃபியட் லீனியா டி-ஜெட் முன்பே விற்பனையில் இருந்தது. ஆனால் இதே பிரிவில் டீசல் கார்களின் போட்டி அதிகரித்தால் மேலும் தன்னுடைய வளமான டீலர்கள் இல்லாமல் போனதால் மிக பெரும் சரிவினை சந்தித்தது. எனவே லீனியா டி-ஜெட் செடான் விற்பனையை ஃபியட் நிறுத்தியது.

ஃபியட் லீனியா டி-ஜெட்

தற்பொழுது டாடாவை நம்பாமல் தனித்து களமிறங்கியுள்ளது. மேலும் பல டீலர்களை திறந்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 டீலர்களை நாடு முழுவதும் திறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பிரிவில் ஃபியட் லீனியா டி-ஜெட் செடான் காரில்தான் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் முதல்முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. இது நவீன தொழில்நுட்பமாகும்.

 ஃபியட் லீனியா டி-ஜெட் காரில் மிகுந்த சக்தி வாயந்த 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 112.44பிஎச்பி மற்றும் டார்க் 207என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இரண்டு விதமான வேரியண்டில் டி-ஜெட் வெளிவரும். அவை டைனமிக் மற்றும் எமோஷன் ஆகும். முன்பை விட பல மாற்றங்கள் இருக்கும். கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டிருக்கும்.

டைனமிக் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185மிமீ மற்றும் எமோஷன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190மிமீ இருக்கும். மேலும் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல மாற்றங்கள் இருக்கும்.

Exit mobile version