Automobile Tamilan

ஃபேஸ்புக் பயனர் மீது வழக்கு தொடர்ந்த பஜாஜ் ஆட்டோ

எதுவென்றாலும் பகிர சுதந்திரத்தை கொடுத்துள்ள நம் நாட்டில் தவறான செய்திகள் மற்றும் போலிகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். கேடிஎம் பைக் பற்றி தவறான கருத்தை வெளியிட்ட முகநூல் பயனர்களின் மீது பஜாஜ் ஆட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.
கேடிஎம் ஆர்சி390 பைக்
கேடிஎம் ஆர்சி390 பைக் 

கேடிஎம் பைக்கை வாங்கிய 50 % பேர் நம்முடன் நீண்ட நாள் வாழ்வதில்லை என்ற எழுதப்பட்டுள்ள இந்த படத்தினை பாருங்கள். இந்த படத்தினை அமித் குமார் பகிர்ந்துள்ளவர் 18 லட்சத்திற்க்கு மேற்பட்ட பயனர்கள் கொண்ட தி பேக் பெஞ்சர்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான பயனர்கள் விருப்பம் மற்றும் பகிரந்துள்ளனர்.

தவறான செய்தி தந்த படம்

மேலும் நடிகர் ராகுல் மற்றும் சுரேஷ் ஓம்னா என்பவரும் கேடிஎம் பைக்கிற்க்கு எதிராக தவறான கருத்துகளை பகிர்ந்துள்ளதால் இந்த மூன்று நபர்களுக்கு எதிராக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளது பஜாஜ்.

புகாரின் எதிரொலியாக மூன்று பயனர்களுமே உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் நிறுவனம் டியூக் 200 , டியூக் 390 ஆர்சி200 மற்றும் ஆர்சி390 போன்ற பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனை செய்கின்றது. அவற்றில் அனைத்து பைக்குகளுமே சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் போன்றவை பெற்று விளங்கும் தரமான பைக்குகளாகும்.

தற்பொழுது கேடிஎம் பைக் பற்றிய புதிய படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த படம் இதோ….

பொழுதுபோக்கிற்கு பகிர்ந்தாலும் தவறான செய்தியை பகிர்வதனை தவிர்ப்போம். 

Exit mobile version