ஃபோக்ஸ்வேகன் ஈ-அப் எலெக்டரிக் கார்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஈ-அப் எலெக்டரிக் காரை உற்பத்தி நிலையில்  அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன்  ஈ-அப் எலெக்டரிக் கார் வருகிற 2013 ஃபிரான்க்ப்ர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
ஃபோக்ஸ்வேகன்  ஈ-அப் எலெக்டரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐன் பேட்டரி 150 கீமி வரை பயணிக்கலாம். அரை மணி நேரத்தில் 80% சார்ஜி ஆகிவிடும். பேட்டரி எடை 150கீகி ஆகும்.
Volkswagen E-Up
ஈ-அப் எலெக்டரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 79 எச்பி ஆற்றலையும் மற்றும் தொடர்ந்து 54எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். டார்க் 210என்எம் வரை கிடைக்கும். 
14 விநாடிகளில் 0-100 km/hr தொடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 135km/hr ஆகும். ஏசி மற்றும் டிசி என இரண்டு விதமான பவரிலும் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதற்க்கென கம்பைன் சார்ஜிங் அமைப்பு பயன்படுத்தியுள்ளனர். இந்த காரின் மொத்த எடை 1185கீகி ஆகும்.
Exit mobile version