Auto News

ரூ.1.62 லட்சம் வரை ஃபோர்டு எண்டெவர் விலை உயர்வு

பிரிமியம் எஸ்யூவி சந்தையில் மிக சிறப்பான கார்களில் ஒன்றான ஃபோர்டு எண்டெவர் விலை ரூ.1.62 லட்சம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் விலை சரிவினை சந்தித்துள்ளது.

சில தினங்களுக்கு  முன்னதாக ஃபோர்டு ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் கார்களில் விலை ரூ.21,000 முதல் அதிகபட்சமாக ரூ.91,000 வரை விலை குறைத்த நிலையில் எண்டெவர் மாடலின் விலையை ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.62 லட்சம் வரை உயர்த்தியுள்ளது.

எஞ்ஜின் விபரம்

160PS ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200PS ஆற்றலை வழங்கும் 3.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450NM ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

ஃபோர்டு எண்டேவர் மைலேஜ் விபரம்

எண்டேவர்  2.2L 4×2 MT Trend மைலேஜ் லிட்டருக்கு 14.12 கிமீ

என்டெவர்  2.2L 4×2 AT Trend மைலேஜ் லிட்டருக்கு 13.50 கிமீ

ஃபோர்டு எண்டேவர் விலை பட்டியல்

வேரியண்ட் புதிய விலை (ரூ.) பழைய விலை (ரூ.) வித்தியாசம்
2.2L 4X2 MT Trend 25 லட்சம் 23.63 லட்சம் 1.36 லட்சம்
2.2L 4X2 AT Trend 25.5 லட்சம் 24.39 லட்சம் 1.11 லட்சம்
2.2L 4X4 MT Trend 26.6 லட்சம் 25.49 லட்சம் 1.11 லட்சம்
2.2L 4X2 AT Titanium 27.5 லட்சம் 26.14 லட்சம் 1.36 லட்சம்
3.2L 4X4 AT Trend 27.65 லட்சம் 26.54 லட்சம் 1.11 லட்சம்
3.2L 4X4 AT Titanium 29.76 லட்சம் 28.15 லட்சம் 1.62 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

Read more: 2016 ஃபோர்டு எண்டேவர் விற்பனைக்கு வந்தது

[envira-gallery id=”4677″]

Share
Published by
MR.Durai
Tags: Ford