Site icon Automobile Tamilan

அமியோ டீசல் கார் வருகை எப்பொழுது ?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அமியோ கார் முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமியோ காரின் டீசல் என்ஜினில் மேம்படுத்தப்பட்டு வருவதனால் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வரவுள்ளது.

ரூ.720 கோடி முதலீட்டில் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் காம்பேக் ரக செடான் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.24 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல புதிய வசதிகளுடன் சிறப்பான தோற்ற பொலிவினை கொண்ட மாடலாக விளங்குகின்றது.

74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்  இழுவைதிறன் 110 Nm ஆகும்.இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமியோ டீசல் காரில் 1.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகப்படியான மாசு உமிழ்வினை வெளிப்படுத்துவதனால் தற்பொழுது மேம்பாட்டு பணியில் உள்ள காரணத்தால் அடுத்த சில மாதங்களில் அதாவது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம். மேலும் மேம்படுத்தப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட வென்ட்டோ மற்றும் போலோ கார்களிலும் வரவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ பெட்ரோல் கார் விலை விபரம்

வருகின்ற ஜூலை முதல் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 1.90 லட்சம் டீசல் கார்கள் மாசு உமிழ்வு பிரச்சனைக்காக திரும்ப அழைக்கப்பட உள்ளது.

[envira-gallery id=”7381″]

 

 

Exit mobile version