Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்பிரஸ் டெலிவரி விரைவாக – இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே சார்பில் கார்களை எடுத்து செல்லும் ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகத்தை அதிகரிக்கவும்  ஆட்டோமொபைல் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 25 % பங்களிப்பினை பெறும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

auto-express-train

முதல் ரெயில் ஆட்டோ எக்ஸ்பிரஸ் குருகிராம் , ஹரியானா முதல் நித்வன்தா ,கர்நாடகா வரையில் மாதந்தோறும் 2000 கார்களை டெலிவரிகொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதோடு மாதந்தோறும் 6000 கார்களையும் டெலிவரி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.

ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பு கால அட்டவனை பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் ரெயில் வேகத்தை மணிக்கு  100 கிமீ அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் தற்பொழுது டெலிவிரி கொடுக்க 70 மணி நேரங்கள் ஆகின்றது. மணிக்கு 100 கிமீ ஆக அதிகரிக்கும்பொழுது 57 மணி நேரமாக குறையும். கூடுதலான டிரிப்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால்மாதம் 6000 கார்களை வரை டெலிவரி கொடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டோ ஹப் ரயில் முனையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலஜாபாத்தில் அமைந்துள்ளது. ஆட்டோ ஹப் வாயிலாக வருடத்திற்கு 10 லட்சம் கார்களை  எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் , ஃபோர்டு , ரெனோ , நிசான் ,டட்சன் , பிஎம்டபிள்யூ போன்ற முக்கிய நிறுவனங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.

Exit mobile version