இந்திய கார்களின் சராசரி மைலேஜ் உயர்கின்றது

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் குறைந்தபட்ச சராசரி மைலேஜ் லிட்டருக்கு 18.2கிமீ ஆக 2017ஆம் ஆண்டு முதல் உயரத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மைலேஜ்

தற்பொழுது உள்ள மைலேஜ் விதிமுறைகளை விட 15% வரை கூடுதலாக புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. அனைத்து கார்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

ஓரு நிறுவனத்தின் மொத்த கார் பிராண்டுகளின் குறைந்தபட்ச சராசரி மைலேஜ் 18.2 கிமீ ஆக இருந்தால் போதும் என்பதால் எளிதாக பல நிறுவனங்கள் கடந்துவிடும். ஆனால் பிரிமியம் கார் நிறுவனங்களுக்கு இது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்தபட்ச சராசரி மைலேஜ் தராத நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அளவு அபராதம் விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் பேருந்து மற்றும் டிரக் வாகனங்களுக்கு சராசரி மைலேஜ் கொள்கையை வகுக்க உள்ளது.

2022ஆம் ஆண்டில் சராசரி மைலேஜ் 22.2கிமீ ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் அமெரிக்கா , ஜெர்மனி , ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளது.

Exit mobile version