Site icon Automobile Tamilan

இன்னோவா க்ரீஸ்டா உற்பத்தி அதிகரிப்பு – டொயோட்டா

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா எம்பிவி அமோக வரவேற்பினை பெற்றுள்ளதால் இன்னோவா உற்பத்தியை அதிகரித்துள்ளது. மாதாந்திர உற்பத்தி 6000 கார்கள் என்றிருந்து வந்த இன்னோவா க்ரீஸ்டா உற்பத்தி 7800 கார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

போட்டியாளர்கள் என்பதனை தாண்டி தனது சிறப்பான தரத்தினால் தனித்தன்மையுடன் விளங்கும் டொயோட்டா கார்களின் பிரசத்தி பெற்ற இன்னோவா காரின் புதிய இன்னோவா க்ரீஸ்டா இருவிதமான டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் முந்தைய மாடலை விட சராசரியாக ரூ.4.20 லட்சம் கூடுதலான விலையில் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிறப்பான வரவேற்பினை பெற்று 30,000 முன்பதிவுகள் என்ற இலக்கினை கடந்துள்ளதால் காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை உள்ளது.

150 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4லி இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.

174 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றுள்ளது. 2.8லி இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.

இன்னோவா கார் பெற்றுள்ள 30,000 முன்பதிவுகளில் 50 சதவீத முன்பதிவுகள் டாப் வேரியண்டான் 2.8 Z AT ( 21,17,518) மாடலுக்கு ஆகும். காம்பேக்ட் ரக எஸ்யூவி , எம்பிவி கார்களை பின்னுக்கு தள்ளி பல பயன் பயணிகள் வாகன பிரிவில் கடந்த சில மாதங்களாக முன்னிலை வகித்து வருகின்றது. ஜூன் மாத விற்பனையிலும் 7500 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி மாதம் 7800 இன்னோவா கார்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதால்காத்திருப்பு காலம் கனிசமாக குறையும் என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் படங்கள

[envira-gallery id=”7252″]

 

Exit mobile version