Site icon Automobile Tamilan

ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி திரும்ப அழைப்பு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் புதிய பன்டல் கிளப் பிரேக் லைன் மற்றும் எரிபொருள் குழாய்  மேலும் பின்புற இருக்கை போல்ட் போன்ற பிரச்சனைகளின் காரணமாக 48,000 டீசல் எஸ்யூவி கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

 

48,000 ஈக்கோஸ்போர்ட் டீசல் காரில் புதிய பன்டல் கிளிப் பிரேக் லைன் மற்றும் எரிபொருள் குழாயில் மாற்றப்பட உள்ளது.  மேலும் 700 கார்கள் பின்புற இருக்கைகளின் மடிக்கும் போல்ட்டுகள் சிறப்பாக இயங்கவில்லை என்ற காரணத்தால் மாற்றப்படுகின்றது.

எவ்விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்படுகின்றது. உங்கள் காரில் இந்த பிரச்சனை இருந்தால் உங்களின் டீலர் நேரடியாக அழைக்க உள்ளனர். அதாவது ஈக்கோஸ்போர்ட் காரின் தயாரிப்பு தேதி ஏப்ரல் 2013 முதல் ஜூன் 2014 வரை இருக்கும் கார்களில் இந்த பிரச்சனை உள்ளது. மேலும் பின்புற இருக்கைகளில் போல்ட் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கார்கள் தயாரிப்பு தேதி ஜனவரி 2016 முதல் பிப்ரவரி 2016 வரை தயாரிக்கபட்டுள்ளது.

Exit mobile version