Automobile Tamilan

உலகின் சிறந்த கார் – 2015

2015ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

சிறந்த கார் தேர்வு முறை

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 22 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக நடந்துவந்தது.

இந்த போட்டியில் பங்கேற்க்கும் கார்கள் குறைந்தபட்சம் இரு கண்டங்களில் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் ஜனவரி 1 ,2014 முதல் மே 31, 2015 காலத்திற்க்குள் அறிமுகம் செய்யப்பட்ட புதிய காராக இருத்தல் அவசியம்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் வென்ற உலகின் சிறந்த கார் ஆடி ஏ3 , பெர்ஃபாரமன்ஸ் பிரிவில் போர்ஷே 911 ஜிடி3 கார் , சொகுசு பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார், சுற்றுசூழல் மற்றும் சிறந்த டிசைன் என இரண்டு பிரிவிலும் பிஎம்டபிள்யூ ஐ3 கார் வென்றது.

உலகின் சிறந்த கார் 2015

இறுதி சுற்றுக்கு முன்னேறிய மூன்று கார்கள் ஃபோர்டு மஸ்டாங் , ஃபோக்ஸ்வேகன் பஸாத் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக தேர்வு பெற்றுள்ளது.

உலகின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் கார் 2015

இறுதி சுற்றுக்கு முன்னேறிய மூன்று கார்கள் பிஎம்டபிள்யூ எம்3 / எம்4, ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி கார்களில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் காராக தேர்வு பெற்றுள்ளது.

உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் 2015

இறுதி சுற்றுக்கு முன்னேறிய மூன்று கார்கள் பிஎம்டபிள்யூ ஐ8 , ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஇ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 500 ஹைபிரிட் கார்களில் பிஎம்டபிள்யூ ஐ8 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த சுற்றுசூழல் காராக தேர்வு பெற்றுள்ளது.

உலகின் சிறந்த டிசைன் கார் 2015

இறுதி சுற்றுக்கு முன்னேறிய மூன்று கார்கள் சிட்ரோன் சி4 கேக்டஸ் , வால்வோ எக்சி90 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்களில் சிட்ரோன் சி4 கேக்டஸ் 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த டிசைன் காராக தேர்வு பெற்றுள்ளது.

உலகின் சிறந்த சொகுசு கார் 2015

இறுதி சுற்றுக்கு முன்னேறிய மூன்று கார்கள் பிஎம்டபிள்யூ ஐ8 , மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே மற்றும் ரேஞ்ச்ரோவர் ஆட்டோபையோகிராஃபி லாங் வீல் பேஸ் கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த டிசைன் காராக தேர்வு பெற்றுள்ளது.

Exit mobile version