ரெனோ வாடிக்கையாளர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம்

ஜூன் 5  உலக சுற்றுச்சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்பட்டு உலகநாடுகள் முழுவதும் சூற்றுச்சூழல் தினத்தில் இயற்க்கை சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றது. இதனை ரெனோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுகின்றது.

ஜூன் 5 , 2016 அதாவது நாளை ரெனோ டீலர்கள் வாயிலாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மாசு பரிசோதனை (Pollution check-up – PUC ) செய்ய உள்ளது. அனைத்து ரெனோ வாடிக்கையாளர்ளுக்கும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தி கொண்டு உங்கள் வாகனத்தின் மாசு உமிழ்வு அளவினை தெரிந்து கொள்ளும் வகையிலும் பியூசி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் டீலர்களுக்கு மரக்கன்றுகள் நடுவதனை அதிகரிக்கும் நோக்கில் அருகில் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்க்கு கேட்டு கொண்டுள்ளது. இலவச மாசு பரிசோதனை தவிர வாடிக்கையார்களுக்கு சிறப்பான அனுபவத்தினை வழங்கும் வேடிக்கையான விளையாட்டு போட்டிகளை நடத்திகின்றுது. மேலும் ரெனோ இந்தியா பணியார்களுக்கு ஜூன் 6 ,2016யில் இலவச மாசு பரிசோதனை செய்ய உள்ளது.