ஏப்ரிலியா எஸ்ஆர் 150 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

க்ராஸ்ஓவர் பைக் என அழைக்கப்படுகின்ற ஏப்ரிலியா எஸ்ஆர் 150 பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம். ஏப்ரிலியா SR 150 (Aprilia SR 150) ஸ்கூட்டர் அறிமுக விலை ரூ.65,000 ஆகும்.

 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள பியாஜியோ ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதனால் மிக சவாலான விலையில் 150சிசி ஸ்கூட்டர் அமைந்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள வெஸ்பா மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள மோட்டோபிளக்ஸ் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்ய உள்ளதால் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர பேடிஎம் தளத்தின் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

 

ஸ்கூட்டரின் க்ராஸ்ஓவர் ரக மாடலாக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைன் தாத்பரியங்களுடன் ஏப்ரிலியா ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை பெற்ற மிக சவாலான விலையில் அமைந்துள்ள சக்திவாய்ந்த ஸ்கூட்டராக ஏப்ரிலியா எஸ்ஆர் 150 விளங்குகின்றது.

ஏப்ரிலியா எஸ்ஆர் 150 – முழுவிபரம்

1. எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் 11.4 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 154.4 சிசி இஞ்ஜின் டார்க் 11.5Nm ஆகும். அப்ரிலியா SR 150  மைலேஜ் லிட்டருக்கு 45 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது.

2. ஒரு மணி நேரத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை மிக இலகுவாக எட்டும் என தெரிவிக்கப்படுவதனால் இந்தியாவின் மிக வேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையை அப்ரிலியா SR150 பெற உள்ளது.

3. ஸ்போர்ட்டிவ் தாத்பரியத்தில் மிக சிறப்பான தோற்ற பொலிவினை பெற்று இளைஞர்களை கவரும் வகையிலான அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

4. நேர்த்தியான  ஸ்டைலிங் தாத்பரியத்தில் மிகவும் தட்டையாக அமைந்துள்ள அப்ரானில் இடம்பெற்றுள்ள முகப்பில்  இரட்டை பிரிவு ஹெட்லைட்  ,  ஸ்டைலிசான இரட்டை பிரிவு டிஜிட்டல் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் , சிவப்பு மற்றும் கருப்பு நிற கலவையில் அமைந்துள்ள இருக்கை அமைப்பு என தோற்றத்தில் கவர்ச்சியான அம்சத்தை பெற்று விளங்குகின்றது.

 

5. முன்பக்கத்தில் உள்ள டயரில் 220மிமீ டிஸ்க் பிரேக் , 14 இன்ச் வீல் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

6. மேட் பிளாக் மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

7.  ரூ.65,000 எக்ஸ்ஷோரும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

8. பியாஜியோ வெஸ்பா டீலர்கள் மற்றும் மோட்டோபிளக்ஸ் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

9.  க்ராஸ்ஓவர் பைக் மாடலாக அழைக்கப்படும் ஏப்ரிலியா எஸ்ஆர் 150 மிக சவாலான மாடலாக இந்திய சந்தையில் விளங்கும்.

10. அடுத்த வாரம் முதல் அப்ரிலியா எஸ்ஆர் 150 டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 படங்கள்

Exit mobile version