குவாட்ரிசைக்கிள் இயக்குவதற்க்கான விதிமுறைகள்

மத்திய அரசு குவாட்ரிசைக்கிள் என்ற புதிய பிரிவு வாகனங்களுக்கான அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான தனிப்பட்ட விதிகளை வகுத்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 13 முதல் குவாட்ரிசைக்கிள் சாலைகளில் இயங்கும்.
பஜாஜ் ஆர்இ60

குவாட்ரிசைக்கிள் விதிமுறைகள்

1. குவாட்ரிசைக்கிள் வாகனங்களில் “Q”  வார்த்தை பெரிய அளவுகளில் முன்னால் எழுதியிருக்க வேண்டும்.

2. நெடுஞ்சாலைகளில் இயக்ககூடாது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.

3. குவாட்ரிசைக்கிளின் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ மட்டுமே.

4. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

5. பயணிகளுக்கான வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும் சரக்கு வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 2 நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

6. பயணிகளுக்கான குவாட்ரிசைக்கிள் 450கிலோ எடை மட்டுமே இருத்தல் அவசியம் சரக்கு வாகனங்களின் எடை 550 கிலோ மட்டுமே இருக்க வேண்டும்.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக குவாட்ரிசைக்கிளை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து மஹிந்திரா, டாடா, பியாஜியோ போன்ற நிறுவனங்களும் களமிறக்கலாம்.

ஆட்டோரிக்‌ஷாவிற்க்கு மாற்றாக களமிறங்க உள்ள குவாட்ரிசைக்கிள் வெற்றி பெறுமா ? உங்கள் கருத்து என்ன..

Exit mobile version