Site icon Automobile Tamilan

கூகுள் கழுதையை கொன்றதா?

கூகுள் நிறுவனம் இணையத்தின் இதயமாக செயல்பட்டு வருவதை அறிவோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆள்யில்லாத காரினை களமிறக்கியதை பலர் அறிவோம்.

இந்த ஆள்யில்லாத கார் தற்பொழுது போட்ஸ்வானாவில் சோதனையில் உள்ளது. நேற்று போட்ஸ்வானாவில் கூகுள் ஆள்யில்லாத கார் ஒரு கழுதை மோதி விட்டதாக டிவிட்டரில்(@TheRealSheldonC) செய்தினை வெளியிட்டார்.

Donkey-Googl;e-2

இது பற்றி நேற்று கூகுள் ஸ்டீரிட் வீயூவ் டீம் (news.com.au) செய்தி மற்றும் படங்களை அனுப்பியதாம். காரானது கழுதையின் மீது மோதிய பின் கழுதை கீழே விழுந்த சில நிமிடங்களுக்கு பின் எழுந்து நடந்து சென்று விட்டதாம்.
கூகுள் ஸ்டீரிட் வீயூவ் டீம் செய்தி தொடர்பாளர் கூறுகையில் கழுதையை மோதி விட்டது உண்மைதான் பின்பு கழுதை எழுந்து பின்புறமாக நடந்து பின்பு முன்னோக்கி நடந்து சென்றது என கூறியுள்ளார்.

இது பற்றி மெல்போர்ன் யூனிவர்சிட்டி விலங்கியல் ப்ரபசர் கூறிய செய்தி கழுதை பின்புறமாக நடக்க வாய்ப்பிலை என கூறியுள்ளார்.

Exit mobile version