Site icon Automobile Tamilan

சாக்‌ஷி & பி.வி சிந்துக்கு தார் எஸ்யூவி பரிசளிக்கும் ஆனந்த மஹிந்திரா – ரியோ ஓலிம்பிக் 2016

ரியோ ஒலிம்பிக் 2016-ல் மகளிர் 58 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்ற சாக்‌ஷிக்கு மஹிந்திரா தலைவர் ஆனந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிக்க உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் முதல் பதக்க வேட்டையை தொடங்கி உள்ள நிலையில் சாக்‌ஷிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது . ஹரியானா மாநில அரசு சாக்‌ஷிக்கு 2.5 கோடி மற்றும் ஸ்போர்ட் கோட்டாவில் அரசு வேலை வழங்கியுள்ளது. மேலும் ரயில்வே அமைச்சகம் சார்பாக 60 லட்சம் , இந்தியன் ஓலிம்பிக் சங்கம் சார்பில் 20 லட்சம் வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஆனந்த மஹிந்திரா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

updated : மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்ணை என்ற புதிய வரலாறு படைத்த பி.வி. சிந்துக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை வழங்குவதாக ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

 

டிவிட்டர் செய்தி
//platform.twitter.com/widgets.js

மஹிந்திரா தார் எஸ்யூவி சிறப்புகள்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றான மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 63எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் DI என்ஜின் மற்றும் 105எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 CRDe என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மிக சிறப்பான ஆஃப் ரோடு வாகனமான தார் எஸ்யூவி எந்த சாலையிலும் பயணிக்கும் வகையிலான சிறப்பு அம்சங்களை கொண்டதாகும் காடு , மலை என எதிலும் பயணிக்கும் வகையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் சேறு , சகதி மற்றும் க்ரீப் கிடைக்காத இடங்களிலும்  சிறப்பாக இயங்கும் வகையில் லாக்கிங் டிஃப்ரன்ஷியல் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; மஹிந்திரா தார் எஸ்யூவி முழுவிபரம்

Exit mobile version