Automobile Tamilan

சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி திரும்ப அழைப்பு

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி காரில் பின்புற டிரைவ் ஷாஃப்டில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் நோக்கில் திரும்ப அழைக்க உள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

ssangyong-rexton-suv

பின்புற டிரைவ் சாஃப்டில் ஏற்பட்டுள்ள சிறிய பழுதால் டார்க் இழப்பினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் நோக்கில்  செப்டம்பர் 2014 க்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட  ரெக்ஸ்டான் கார்களில் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றை திரும்ப அழைத்து தோனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

எத்தனை வாகனங்கள் என்கிற எண்ணிக்கை விபரத்தினை சாங்யாங் வெளியிடவில்லை என்றாலும் இதுகுறித்த முக்கிய அறிவிப்பினை நேரடியாக வாடிக்கையாளர்களை அழைத்து வாகனத்தில் டார்க் இழப்பு ஏற்ப்படுகின்றதா என சோதனை செய்த பின்னர் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக மாற்றப்பட உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரெக்ஸ்டான் காரில் இருவிதமான ஆற்றல் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. RX270 XDi வேரியண்டில்  162 bhp ஆற்றல் மற்றும் RX270 XVT வேரியண்டில் 184 bhp  ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

ரெக்ஸ்டான் எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , எண்டேவர் , சான்ட்ஃபீ போன்றவை ஆகும்.

Exit mobile version