Automobile Tamilan

சென்னையில் கியா மோட்டார்ஸ் அமையாது ..! இதற்கு தமிழக அரசியல் காரணமா ?

தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை சென்னையில் அமைவதற்கு வாய்ப்பில்லை என்றே சூழ்நிலையே உருவாகியுள்ளது.

கியா மோட்டார்ஸ்

ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கியா கார் தயாரிப்புநிறுவனம் இந்திய சந்தையில் தொழிற்சாலை அமைப்பதற்கான இறுதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் அதில் சென்னை இடம்பெறவில்லை என்பதனால் தமிழகத்தில் கியா நிறுவனம் அமைய வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது.

2017 Sorento

400 ஏக்கர் நிலம் தமிழக அரசு கியா கார் நிறுவனத்துக்கு அளிப்பதாக அறிவித்திருந்தாலும், இங்கே நிலவக்கூடிய சாதகமற்ற அரசியல் சூழ்நிலையே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றே நாம்  நினைக்கின்றோம்.

கியா நிறுவனத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள மூன்று நகரங்கள் இவைதான்,

ஆந்திர மாநிலம் கியா மோட்டார்ஸ் ஆலை அமைவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பாக ஹூண்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு சென்னையில் அமைந்துள்ளதால் இதன் அருகாமையிலே ஆலை அமைக்க ஹூண்டாய் திட்டமிட்டிருந்த நிலையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீசிட்டி தொழிற்போட்டையில், இசுசூ நிறுவனம் அமைக்கப்பட்டு வருவதனை தொடர்ந்து பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் களமிறங்க மிகப்பெரிய சலுகைகளை ஆந்திர அரசு வாரி வழங்கி வருகின்றது.

ஆந்திர அரசு வழங்கும் சிறப்பு சலுகைகள்  விபரம் இதோ…!

பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள்

குறைந்த விலையில் நிலம் கையகப்படுத்துதல்
• 24 மணி நேர மின்சாரம்
• 4 வழிசாலை அமைக்கப்பட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு நிதி சலுகைள் உள்பட பலதரப்பட்ட வரி சலுகைகளை ஆந்திர அரசு வழங்கி வருகின்றது.

ரூபாய் 5 ஆயிரம் கோடியை முதற்கட்டமாக கியா மோட்டார்ஸ் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் ஆண்டுக்கு 20,000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக ஆண்டுக்கு 30,000 கார்களை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றது.

இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகின்ற சென்னை நகரம் தனது பெருமையை இழந்து வருகின்றது என சமீபத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில் வாகன தயாரிப்பு சந்தையில் முன்னணி வகித்து வந்த சென்னை தற்பொழுது பெருமையை இழந்து வருவதே உண்மையே..!

தமிழக அரசியலில் நிலவிவரும் சாதகமற்ற சூழ்நிலையே மிக முக்கிய காரணமாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியேற காரணமாக உள்ளது. வாகன நிறுவனங்கள் வெளியேற தமிழக அரசியல் நிலைதான் காரணமா..?இது  பற்றி உங்கள் கருத்து என்ன,.. நண்பர்களே…

ஆட்டோமொபைல் தலைநகரம் பெருமையை இழக்கின்றதா ? : சென்னை

Exit mobile version