Home Auto News

சென்னை மழையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும்

நம் மாநில தலைநகரம் சென்னை மழையால் சிதைந்து மீண்டும் சுனாமி வந்தது போல காட்சியளிக்கும் நிலையில் முறையற்ற பருவநிலை மாற்றங்காளால் முறையான கால இடைவெளியில் மழை பொழியாமல் போக முக்கியமான காரணம் பருவநிலை மாற்றமே ஆகும்.

keep-calm-and-pray-for-chennai-5

அதிகப்படியான கழிவுகளால் தினமும் மாசுபட்டு வரும் உலகில் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு அறிகுறி மட்டுமே என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். இவற்றின் முழுமையான விளைவு காலப்போக்கில் இன்னும் அதிகமாகும்.

தற்பொழுது நடந்த பருவநிலை மாற்றத்தால் எந்த மாதிரியான அழிவுகளை உலக நாடுகள் சந்திக்க உள்ளன என்பது குறித்து பருவநிலை மாற்றம் ஜ.நா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

  • இந்த நூற்றாண்டு இறுதிக்குள் புவியின் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் நம் வருங்கால சந்ததி மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  • வரும் 2100ம் ஆண்டிற்க்குள் கடல் நீர் மட்டம் 26 – 82 செ.மீ உயரும் இதனால் 7500 கிமீ கடற்கரைபகுதிகள் மற்றும் 1300 சிறிய தீவுகள் அழிய வாய்ப்புகள் உள்ளது.
  • இமயமலை , கீரின்லாந்து , அன்டார்டிகா பனி மலைகள் உருகுவதனால் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்க தொடங்கும் இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும்.
  • 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பதற்க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா திட்டத்தால் கூட 28 கோடி மக்களை அழிக்க நேரிடும்.
  • சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு உலகின் பல இடங்களில் நிரந்தரமாகும். இதனால் பல கோடி மக்கள் தங்கள் உயிரை இயக்க வேண்டி இருக்கும்.
  • உறைய வைக்கும் பனி பொழிவு , அதிவேக சூறை காற்று , அதிகப்படியான வெப்பம் தொடரும்.
  • உலகின் சில பகுதிகள் குடிநீர் தட்டுபாட்டில் தவிக்கும்.
  • விவசாயம்  முடங்க தொடங்கும்
  • பல நாடுகள் அகதிகளாகும்.
  • உலக அளவில் இயற்கைப் பேரிடர்கள் தொடர் வாடிக்கை ஆகலாம்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாமல் இந்தியா சீனா போன்ற வளரும் நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருவநிலை மாநாட்டில் இது குறித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றத்தால் சில மோசமான விளைவுகளை நாம் சந்திக்க தொடங்கியுள்ளோம். இந்த பருவ நிலை மாற்ற பிரச்சனையை நாம் உருவாக்கவில்லை என்றாலும் உலக நாடுகள் அனைத்தும் விரைவாக செயல்பட வேண்டியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்

ஃபோக்ஸ்வேகன் மட்டுமல்ல பல நிறுவனங்கள் மிக மோசமான வாயுவுகளை காற்றில் கலக்கின்றன . இதனால் பூவி வெப்பமடைதல் , முறையற்ற பருவநிலை போன்றவை முக்கிய காரணமாகும்.

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் நிறுவனம் உலக அரங்கில் மாசு உமிழ்வு மோசடியால் சுமார் 1.10 கோடி கார்களை திரும்ப அழைக்க உள்ளது. மோசடியான முறையில் மென்பொருளை உருவாக்கிய ஃபோக்ஸ்வேகன் அமெரிக்காவில் பல லட்சம் கோடிகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் 3.23 லட்சம் கார்களை திரும்ப அழைக்கின்றது 

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளது.  அந்த மனுவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்பு வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட 9 மடங்கு அதிகமாக நைட்ரஜன் ஆக்சைடு வெளியிடுவதாகவும், எனவே ஃபோக்ஸ்வேகன் நிறுவன தயாரிப்புகளின் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விபரங்களை வரும் டிசம்பர் 23ந் தேதிக்குள் சமர்பிக்க கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னை மழையால் பாதிக்கப்பட மக்களுக்கு உதவி அளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டினை ஆட்டோமொபைல் தமிழன் தெரிவித்து கொள்கின்றது.

Exit mobile version