Automobile Tamil

சென்னை மழை : பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவச முகாம்

சென்னை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாகளுக்கு இலவசமாக 10 நாட்கள் சர்வீஸ் முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

jayalalitha

சென்னை , காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால்  பாதிப்படைந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக அனைத்து வாகனங்களுக்கும் நடத்தப்பட உள்ளது.

செய்திக் குறிப்பு

பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில் முழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தருவதாக என்னிடம் தெரிவித்துள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களை 12.12.2015 முதல் 21.12.2015 வரை 10 நாட்களுக்கு இந்த நிறுவனங்கள் நடத்தும். இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும். இந்தச் சேவை முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மழை வெள்ளம் காரணமாக பழுதடைந்த இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள்/ ஆட்டோ ஒட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி சீர் செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஜெ.ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சர்

 

Exit mobile version