Automobile Tamilan

செப்டம்பர் 6 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் செப்டம்பர் 1ந் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 6 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என அதிரடியான உத்தரவை வழங்கியுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனு மற்றும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. கடந்த செப்.1ந் தேதி  லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மனுவை ஏற்ற  தனி நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 5ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவை பிறப்பித்தார்.

மீண்டும் இன்றைக்கு சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மற்றும் லாரி சம்மேளனம் மனுவும் ஒன்றாக விசாரனைக்கு ஏடுத்துக் கொண்ட நீதிபதி  வழக்கு விசாரணையின் போது மோட்டார் வாகன சட்டம் 130 -படி அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் காட்ட வேண்டும் என்று உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சாலை விபத்துகளில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதால் இதனை கட்டுப்படுத்தவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழக அரசு தங்கள் தரப்பு பதிலை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அசல் வாகன உரிமம் வைத்திருக்க கட்டாயமில்லை என்று நீதிமன்றம் விதித்த தடை நாளையுடன் முடியும் நிலையில், இந்தத் தடையை நீட்டிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. எனவே, புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கொண்டு செல்வது கட்டாயமாகியுள்ளது.

வரும், வெள்ளிக்கிழமை அரசு தாக்கல் செய்யும் பதிலை பொறுத்தே, அடுத்த கட்ட முடிவை அறிவிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Exit mobile version