Automobile Tamil

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் வாங்கலாமா ?

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் கம்பீரமான தோற்றத்தில் இந்திய சாலையில் பயணத்தினை தொடங்கியுள்ளது. ட்ரெயில்பிளேசர் காரினை வாங்கலாமா ? என்ன ப்ளஸ் , மைனஸ் என்ன …தெரிந்து கொள்ளலாம்…
செவர்லே ட்ரையல்பிளேசர்
26.40 லட்சத்தில் 4×2 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் மட்டுமே வந்துள்ளது. 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , இரட்டை முன்பக்க காற்றுப்பைகள்  போன்ற  சிறப்பம்சங்களை ட்ரையில்பிளேசர் பெற்றுள்ளது.
ட்ரையில்பிளேசர் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் , சான்டா ஃபீ , ரெக்ஸ்டான் மற்றும் வரவிருக்கும் புதிய எண்டெவர் போன்றவை ஆகும்.

ட்ரையில்பிளேசர் எஸ்யூவி ப்ளஸ்

1. தோற்றம்
பிரமாண்டமான தோற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள ட்ரையில்பிளேசர் காரின் நீளம் 4.8 மீட்டர் ஆகும். இதன் உறுதிமிக்க பாடி சிறப்பான கிளாசிக் எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது. நேரடியான போட்டியாளரான ஃபார்ச்சூனர் காருக்கு மிகுந்த சவாலாக விளங்கும்.
2. என்ஜின்
பிரிமியம் எஸ்யூவி கார்களுடன் ஒப்பீட்டால் ட்ரையில்பிளேசர் காரின் ஆற்றல் மற்றும் டார்க் கூடுதலாக உள்ளது. 197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தியை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் மோட்டாரை பெற்றுள்ளது. இதன் டார்க் 500என்எம் ஆகும்.
3. கிரவுண்ட் கிளியரன்ஸ்
போட்டியாளர்களை விட சிறப்பான கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு உள்ளதால் சிறப்பான ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு அனுபவத்தினை பெற இயலும்
4. இடவசதி

போட்டியாளர்களுடன் ஒப்பீடுகையில் 7 இருக்கைகளுடன் சிறப்பான இடவசதியை பெற்றுள்ள ட்ரெயில் பிளேசர் வீல் பேஸ் 2845மிமீ ஆகும். சிறப்பான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூமினை பெற்றுள்ளது. இதன் 3 வரிசை மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகளை மடக்கினால் மிக அதிகப்படியாக 1830 லிட்டர் கொள்ளளவு கிடைக்கின்றது. 
5. டாப் வேரியண்ட்

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் ட்ரையல்பிளேசர் காரின் டாப் வேரியண்ட் LTZ மட்டுமே வந்துள்ளது. இதில் 7 இஞ்ச் தொடுதிரை , மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் , டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ், இபிடி , மலையேற இறங்க உதவி போன்ற பல வசதிகளுடன் விளங்குகின்றது.

ட்ரையல்பிளேசர் மைனஸ்

1. வேரியண்ட்

ஒரு வேரியண்ட் மட்டுமே வந்துள்ளதால் கூடுதல் வசதிகளையோ அல்லது குறைவான விலை கொண்ட மாடல்களை தேர்ந்தேடுக்கும் வசதிகள் இல்லை.

2. மெனுவல்

6 வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வந்துள்ளது. மேனுவல் பிரியர்களுக்கு மிகுந்த எமாற்றத்தை அளிக்கும். விலையும் குறைவாக இருக்கும்.

3. விலை

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக செவர்லே ட்ரையல்பிளேசர் இறக்குமதி செய்யப்படுவதனால் விலை கூடுதலாக உள்ளது.

4. குறைவான காற்றுப்பைகள்

டாப் வேரியண்டாக இருந்தாலும் மற்ற நாடுகளில் கூடுதல் காற்றுப்பைகளைவ பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதனால் விலை குறைப்பிற்க்கு இரண்டு காற்றுப்பைகளை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

5. ஆல் வீல் டிரைவ்

ட்ரையல்பிளேசர் காரின் பெரிய குறை என்றால் இந்தியாவில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வரவில்லை. ஆனால் போட்டியாளர்களிடம் இதே விலையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் உள்ளது.

ட்ரையில்பிளேசர் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டால் விலையும் குறையும் பல வதமான வேரியண்ட் ஆப்ஷன்களுடன் மெனுவல் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை பெறலாம்.

Exit mobile version