Automobile Tamilan

செவர்லே பீட் , பீட் ஏக்டிவ் , எசென்சியா கார்கள் விரைவில்

ஜிஎம் செவர்லே நிறுவனம் இந்தியாவில் அடுத்த 24 மாதங்களில்  5 புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. முந்தைய அறிவிப்பில் இருந்த செவர்லே ஸ்பின் எம்பிவி காரை முடக்கியுள்ளது.  செவர்லே பீட் , பீட் ஏக்டிவ் , எசென்சியா கார்களை விரைவில் இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

chevrolet-beat-beatactiv

 

கடந்த முறை செவர்லே வெளியிட்டிருந்த  எதிர்கால மாடல்களில் ட்ரெயில்பிளேசர் மற்றும் ஸ்பின் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தது. ஆனால் தற்பொழுது ஸ்பின் எம்பிவி காரை 2017 ஆம் ஆண்டு திட்டத்தில் இருந்தும் நீக்கியுள்ளது.

புதிய செவர்லே பீட்

சர்வதேச அளவில் விற்பனைக்கு செவர்லே ஸ்பார்க் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் பீட் என்ற பெயரில் விற்பனையில் உள்ள செவர்லே பீட் கார் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகியுள்ள படத்தின் வாயிலாக மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்ட முகப்பு தோற்றத்தில் எல்இடி ரன்னிங் விளக்கினை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செவர்லே பீட் ஏக்டிவ்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய க்ராஸ்ஓவர் ரக பீட் ஏக்டிவ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய தீவரமான சோதனை ஓட்டத்தினை தொடக்கியுள்ளது.  எனவே இந்த வருடத்தின் இறுதிக்குள் செவர்லே பீட் ஏக்டிவ் க்ராஸ்ஓவர் மாடலும் சந்தைக்கு வரவுள்ளது.

 

செவர்லே எசென்சியா

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியிடப்பட்ட கான்செப்ட் மாடலான செவர்லே எசென்சியா செடான் காரானது விற்பனையில் உள்ள செயில் காருக்கு மாற்றாக 4 மீட்டருக்குள் காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு போட்டியாக அமையும் வகையில் சிறப்பான வசதியை கொண்ட மாடலாக அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம்.

புதிய செவர்லே க்ரூஸ் மற்றும் புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யுவி போன்றவற்றையும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை செவர்லே உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பின் எம்பிவி காரின் திட்டத்தை கைவிட்டுள்ளதால் ஸ்பின் எம்பிவி 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Exit mobile version