Automobile Tamilan

இந்தியாவில் சேங்யாங் டிவோலி எஸ்யூவி வருகை ரத்து

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான சேங்யாங் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி  கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் குன்கா உறுதிப்படுத்தியுள்ளார். சேங்யாங் டிவோலி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது.

ssangyon-tivoli

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக இந்தியாவில் காட்சிக்கு வந்த சேங்யாங் டிவோலி எஸ்யூவி கார் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில் சோதனை ஓட்டமும் நடைபெற்று வந்த நிலையில் டிவோலி இந்தியாவில் விற்பனை அறிமுகம் செய்யப்படாது என உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற வருடாந்திர ஏசிஎம்ஏ ( ACMA – Automotive Component Manufacturers Association) கூட்டமைப்பில் பேசிய பவன் குன்கா கூறுகையில் சேங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி பெரிதாக சந்தை மதிப்பினை பெற தவறியதாலும் இந்தியாவில் மஹிந்திரா பிராண்டிலே எஸ்யூவிகள் விற்பனை செய்யப்படும் என உறுதிசெய்துள்ளார்.

சேங்யாங் டிவோலி காரின் தளத்தின் அடிப்படையிலான டிவோலி X100 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தினை செயல்படுத்தி வருவதனால் புதிய எஸ்யூவி மாடல் மிக சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களுடன் டிவோலிக்கு இணையாக இருக்கும். மேலும் இனி வரவுள்ள அனைத்து மஹிந்திரா எஸ்யூவி கார்களிலும் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் அடிப்படையிலான மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் எக்ஸ்யூவி ஏரோ மாடலை அடுத்த 15 மாதங்களில் பிரிமியம் ரக சந்தையில் மிக சிறப்பான மாடலாக நிலை நிறுத்தப்படுவதற்கான முயற்சிகளை மஹிந்திரா தொடங்க உள்ளது.

 

Exit mobile version