Automobile Tamilan

ஜீரோ ஸ்டார் ரேட்டிங் – கார் நிறுவனங்கள் கருத்து என்ன ?

சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்ட அனைத்து இந்திய கார்களும் ஜீரோ ஸ்டார் ரேட்டிங் பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கார் நிறுவனங்களின்  பதில் என்ன ? தெரிந்து கொள்ளலாம்.

Mahindra-Scorpio-Global-NCAP-crash-test

மாருதி செலிரியோ மற்றும் ஈக்கோ

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்புகளான செலிரியோ மற்றும் ஈக்கோ கார்கள் பெரியவர்கள் பாதுகாப்பில் ஜீரோ நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றுள்ளது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பில் இரு கார்களும் ஒரு நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றுது.

இதுகுறித்து மாருதி சுஸூகி சேர்மேன் RC. பார்கவா கூறுகையில் இந்திய கார்களுக்கான தரம் கொண்டு சோதிக்கப்படடுள்ளதா ? என கேள்வி எழுப்பியுள்ளார். எதற்காக குளோபல் என்சிஏபிவுடன் ஒப்பீட வேண்டாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியா

கட்டுறுதிமிக்க காராக கருதப்படும் மஹிந்திரா ஸ்கார்ப்பியா எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட் ஜீரோ நட்சத்திரத்தினை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் இரு நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றுது.

இதுகுறித்து மஹிந்திரா செய்தி தொடர்பாளர் கூறுகையில் காற்றுப்பை உள்ள வேரியண்ட்களை 75 சதவீத வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். காற்றுப்பை இல்லாத வேரியண்ட மட்டுமே மிக குறைவான மதிப்பினை பெற்றுள்ளது.

ரெனோ க்விட்

ரெனோ இந்திய செய்தி தொடர்பாளர் கூறுகையில் க்விட் கார் இந்திய தரத்திற்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நல்லது என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version