ஜேஎல்ஆர் இன்கன்ட்ரோல் ஆப் அறிமுகம்

0

ஜேஎல்ஆர் அதாவது ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இன்கன்ட்ரோல் என்ற பெயரில் அண்டராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் , ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் 2016 மாடல்களில் இன்கன்ட்ரோல் செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய எவோக் காரில் ஏப்ரல் 2016 முதலும் ஜாகுவார் கார்களில் அடுத்த வருடத்திலிருந்தும் இந்த அப்ளிகேஷனை பெற இயலும்.

ஜேஎல்ஆர் இன்கன்ட்ரோல் ஆப் முக்கிய அம்சங்கள்

  • அண்டராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மாடர்ட் மொபைல்களில் இயங்கும்.
  • ஸ்மார்ட்போன் அப்பளிகேஷன் அனைத்தும் இன்கன்டோல் சிஸ்டத்துக்கு மாற்றிக்கொள்ள இயலும்.
  • பிரபலமான  மேப்மை இந்தியா , ஹங்கமா , என்டிடிவி மற்றும் ஜூமோட்டா போன்றவை உள்ளது. மேலும் பல வசதிகள் விரைவில் இணைக்கப்படும்.
  • போஷ் நிறுவனத்தின் உதவியுடன் ஜாகுவார் லேண்ட் ரோவர் உருவாக்கியுள்ளது.

 

ஸ்மாட்போன் அப்பளிகேஷன் மிக சிறப்பான  நவீன நுட்ப அனுபவத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் . வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான செயலியை மிக இலகுவாக சொகுசு கார்களில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என ஜேஎல்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jaguar Land Rover India introduce In ControlTM Apps