டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் கார் – சிறப்பு பார்வை

கவர்ந்திழுக்கும் எஸ்யூவி கார்களின் தோற்ற அமைப்பில் டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. மிக குறைவான விலையில் சிறப்பான மாடலாக விளங்கும் வகையில் ரெடி-கோ கார் க்விட் , ஆல்ட்டோ 800 மற்றும் இயான் கார்களுக்கு மத்தியில் போட்டியை ஏற்படுத்தும்.

வருகின்ற ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள டட்சன் ரெடி-கோ காருக்கு தற்பொழுது முன்பதிவு செய்ய ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ரெடி-கோ காரின் எதிர்பார்க்கப்படும் விலை க்விட் காருக்கு குறைவாக தொடங்கலாம் அதாவது ரூ.2.50 லட்சத்தில் தொடங்கி ரூ.3.50 லட்சத்துக்குள் விலை அமையும். முந்தைய மாடல்களான கோ , கோ ப்ளஸ் மாடல்களை போல அல்லாமல் மிக உறுதியான மற்றும் தரமான பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு சிறப்பாகவே இருக்கும் என டட்சன் உறுதிபடுத்தியுள்ளது.

தோற்றம்

ரெனோ- நிசான் கூட்டனி பிளாட்ஃபாரம் க்விட் கார் வடிவமைக்கப்பட்ட CMF-A () தளத்திலே ரெடி-கோ உருவாக்கப்பட்டிருந்தாலும் க்விட் காரின் தோற்றத்தினை தழுவாமல் அமைந்திருப்பது வரவேற்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

98 % உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்ட க்விட் காரினை போலவே உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்ட காராக ரெடிகோ விளங்குகின்றது. தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான எஸ்யூவி கார்களின் க்ராஸ்ஓவர் ரக ஹேட்ச்பேக் காரினை போல D வெட்டு கிரிலுடன் கூடிய தேன்கூடு கிரிலுடன் சிறப்பான தோற்ற அம்சத்தினை பெற்று விளங்குகின்றது.

புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு , பகல் நேர ரன்னிங் விளக்கினை பெற்று சிறப்பான மற்றும் எடுப்பான முகப்பு தோற்றம் தரவல்ல பானெட் கொண்டுள்ளது. பக்கவாட்டில் ஸ்டைலிங்கான புராஃபைல் கோடு , சிறப்பான ஸ்டைல் கொண்ட வீல் கேப்பினை 13 இஞ்ச் ஸ்டீல் வீலில் பெற்றுள்ளது.

பின்பக்க தோற்றத்தில் நவீன டிசைக்கு ஏற்ற டெயில்விளக்கு , பம்பர் போன்றவை க்ராஸ்ஓவர் ரக மாடலுக்கு உரித்தான தோற்றத்தினை பெற்றுள்ளது.

க்விட் (3679மிமீ) காரை விட நீளம் குறைவாக கொண்டுள்ள ரெடிகோ (3430மிமீ) காரின் வீல்பேஸ் (ரெடி-கோ – 2430மிமீ , க்விட் -2422மிமீ ) அதிகமாக உள்ளது. மேலும் உயரமும் அதிகமாக உள்ளது (ரெடிகோ – 1540மிமீ , க்விட் -1478மிமீ). இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185மிமீ ஆகும்.

ரெடிகோ கார் வண்ணங்கள் லைம் கீரின் , வெள்ளை ,சில்வர் , சிவப்பு மற்றும் கிரே ஆகும்.

உட்புறம்

கோ ,கோ ப்ளஸ் போன்ற கார்களில் உள்ளதை போலவே இன்டிரியர் அமைப்பினை பெற்றுள்ள டேஸ்போர்டில் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ள பட்டன்கள் மற்றும் குளோவ் பாக்ஸ் போன்றவை  அமைக்கப்பட்டுள்ளது. முன் இருபக்க வீன்டோகளுக்கும் பவர் வீன்டோஸ் சேர்க்கப்பட்டுள்ளது. க்விட் காரை போல தொடுதிரை அமைப்பினை பெறவிட்டாலும் ஆடியோ சிஸ்டத்தில் ரேடியோ ,சிடி , யூஎஸ்பி ,ஆக்ஸ் தொடர்புகளை பெற இயலும்.

க்விட் (300 லிட்டர்)காரை விட குறைவான பூட்ஸ்பேஸ் பெற்றிருந்தாலும் ஆல்ட்டோ 800 (160 லிட்டர்) காரை விட கூடுதலான ஸ்பேஸ் அதாவது 200 லிட்டர் கொள்ளளவினை கொண்டுள்ளது. டாப் வேரியண்டில் மட்டும் ஒட்டுநருக்கான காற்றுப்பை சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிங்க ; க்விட் கார் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

என்ஜின்

க்விட் கார் பெற்றுள்ள 800சிசி என்ஜினே பெற்றுள்ள ரெடி-கோ காரின் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

மேலும் வரும்காலத்தில் க்விட் காரை போல 1.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் மற்றும்  ஏஎம்டி ஆப்ஷன் இடம் பெறலாம் வருகை பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை.

விலை 

ரெடி-கோ கார் பட்ஜெட் கார் என்பதனால் தொடக்க விலை ரூ.2.50 லட்சத்தில் தொடங்கலாம். தற்பொழுது ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் முன்பதிவுக்கு ஸ்னாப்டீல் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றது.

வாங்கலாமா ?

பட்ஜெட் விலையில் ஸ்டைலிங்கான க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மாடலாக வரவுள்ள ரெடி-கோ கார் க்விட், இயான் , ஆல்ட்டோ 800 போன்ற கார்களுக்கு மிக சிறப்பான மாற்று காராக விளங்கும்.

[envira-gallery id=”7303″]

Share