டாடா ஸீகா இப்போ டாடா டியாகோ

டாடா ஸீகா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் இப்பொழுது டாடா டியாகோ என்ற பெயரை பெற்றுள்ளது. ஸீகா வைரஸ் நோய் தாக்குதலால் காரின் மதிப்பு பாதிக்கு என கருதி டாடா மோட்டார்ஸ் பெயரை மாற்றியுள்ளது.

#FANTASTICONAMEHUNT  என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் பரிந்துரைத்த பெயர்களின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட சிவ்யிட் , அடோர் மற்றும் டியோகோ பெயர்களில் வாடிக்கையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் புதிய பெயர் உறுதி செய்ப்பட்டுள்ளது.

போல்ட் மற்றும் நானோ கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டியாகோ காரில் ரெவோடார்க் மற்றும் ரெவோட்ரான் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டியாகோ கார் அடுத்த சில மாதங்களில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கு போட்டியாக செலிரியோ மற்றும் ஐ10 போன்ற கார் விளங்கும். தனிநபர் மார்கெட் சந்தையில் டாடாவின் சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் டியாகோ காரினை டாடா அறிமுகப்படுத்த உள்ளது.

Exit mobile version