Automobile Tamilan

டொயோட்டா கார்களுக்கு புதிய டிஎன்ஜிஏ பிளாட்ஃபாரம்

டொயோட்டா நிறுவனம் டொயோட்டா நியூ குளோபல் ஆர்க்கிடெச்சர் (Toyota New Global Architecture – TNGA) என்ற புதிய பிளாட்ஃபாரத்தினை உருவாக்கி வருகின்றது . டிஎன்ஜிஏ தளத்தின் மூலம் சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் உற்பத்தி செலவை குறைக்க முடியும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
Toyota New Global Architecture - TNGA

முன்னனி கார் தயாரிப்பாளர்கள் அனைவரும் உற்பத்தி செலவு மற்றும் எரிபொருள் சிக்கனத்தினை மையமாக வைத்தே புதிய தளங்களை உருவாக்கி வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டுக்குள் டொயோட்டா கார்களில் 50 சதவீத வாகனங்களை டிஎன்ஜிஏ தளத்தில் உருவாக்குவதற்க்கு திட்டமிட்டுள்ளனராம். இந்த தளத்தில் முதற்கட்டமாக பிரியஸ் ஹைபிரிட் , கரோல்லா மற்றும் லெக்சஸ் சிடி காரகளை உருவாக்க உள்ளனராம்.

டிஎன்ஜிஏ தளத்தின் மூலம் உற்பத்தி செலவு மிக பெருமளவு  குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு மற்றும் நிலைப்பு தன்மை போன்றவற்றில் தற்பொழுதுள்ள மாடல்களை விட கூடுதலான பாதுகப்பினை உறுதிசெய்யும்.

எரிபொருள் சிக்கனத்தில் தற்பொழுதுள்ள எரிபொருள் சிக்கனத்தை விட கூடுதலாக 25 சதவீதம் வரை கிடைக்கும் வகையில் உருவாக்க உள்ளனர். மேலும் ஆற்றலும் 15 சதவீதம் வரை உயரம் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

டிஎன்ஜிஏ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் கார்கள் மிக நேர்த்தியான தோற்றத்தில் சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பினை தரும். மேலும் இன்னோவா ஃபார்ச்சூனர் கார்களும் 2020 ஆம் ஆண்டுக்கு மேல் இதே தளத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Toyota New Global Architecture (TNGA)

Exit mobile version