Automobile Tamilan

ட்ரையம்ப் போனிவில் பைக் ரேஞ்ச் அறிமுகம் – 2016

புதிய ட்ரையம்ப் போனிவில் ரேஞ்ச் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ட்ரையம்ப் போனிவில் பைக் 1959ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது.
ட்ரையம்ப் போனிவில் பைக்

ட்ரையம்ப் போனிவில் பைக்குகள் மொத்தம் 5 மாடல்கள் வந்துள்ளன அவை ஸ்டீரிட் ட்வின் , போனிவில் T120 , T120 பிளாக் , டரக்ஸ்டான் மற்றும் டரக்ஸ்டான் R ஆகும். தொடக்க நிலை போனி பைக்காக ஸ்டீரிட் ட்வீன் பைக் வந்துள்ளது. இதனை தொடர்ந்து போனிவில் T120 , T120 பிளாக் உள்ளது. டாப் போனெவில் பைக்காக த்ரக்ஸ்டன் மற்றும் த்ரக்ஸ்டன் R  விளங்குகின்றது.

அனைத்து போனிவில் வரிசை பைக்கிலும் 6 வேக கியர்பாக்ஸ் , ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்சபிள் டிராக்‌ஷன் கன்ட்ரோல் நிரந்தரம்சமாக இருக்கும்.

ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் ட்வீன்

ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் ட்வீன்

குறைவான விலை கொண்ட புதிய  ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் ட்வீன் பைக்கில் 80NM டார்க்கினை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பொருத்தப்பட்டடுள்ளது . முந்தைய மாடலை விட 36 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

10 ஸ்போக் கேஸ்ட் ஆலாய் வீல் , ஸ்ட்யின்லெஸ் புகைப்போக்கி , யூஎஸ்பி சாக்கெட் , என்ஜின் இம்மொபைல்சர் போன்ற வசதிகளுடன் வந்துள்ள ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் பைக்கிற்க்கு 150க்கு மேற்பட்ட துனைகருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் போனிவில் T120 & T120 Black

ட்ரையம்ப் போனிவில் T120

கிளாசிக் தோற்றத்துடன் ஸ்டைலிசான ட்ரையம்ப் போனிவில் T120 பைக்கில் 105என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 54 சதவீத வரை டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதமான ரைடிங் மோட் ரெயின் மற்றும் ரோட் , இரட்டை டிஸ்க் பிரேக முன்பக்கத்தில் , வயர் ஸ்போக் வீல் , பியாசூட்டர் புகைப்போக்கி , அலுமினிய கவர் மற்றும் புரோன்ஸ் டிடெயலிங் செய்யப்பட்ட என்ஜின் தோற்றம் , ஹீட்டேட் கிரிப் , சிலிப் அசிஸ்ட் கிளட்ச் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குள் , க்ரூஸ் கன்ட்ரோல் ,   யூஎஸ்பி சாக்கெட் , என்ஜின் இம்மொபைல்சர் போன்ற வசதிகளை போனிவில் T120 பெற்றுள்ளது.

ட்ரையம்ப் போனிவில் T120 பிளாக்

ட்ரையம்ப் போனிவில் T120 பைக்கில் இருந்து சற்று மாறுபட்டு முழுமையான கருப்பு நிற வண்ணத்தில் ( என்ஜின் மற்றும் புகைப்போக்கி)  T120 பிளாக் நுழைந்துள்ளது.

ட்ரையம்ப் போனிவில் த்ரக்ஸ்டன் & த்ரக்ஸ்டன் R

ட்ரையம்ப் போனிவில் த்ரக்ஸ்டன்

போனி பைக்கில் டாப் மாடலாக உள்ள ட்ரையம்ப் போனிவில் த்ரக்ஸ்டன் பைக்கில் 112என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும்  1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 62 சதவீத வரை டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று விதமான ரைடிங் மோட் ரெயின் , ரோடு மற்றும் ஸ்போர்ட் , கிளிப் ஆன் பார்ஸ் , முழுதும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன் , 17 இஞ்ச் வீல் , இரட்டை டிஸ்க் பிரேக முன்பக்கத்தில் என பல வசதிகளுடன்  போனிவில் த்ரக்ஸ்டன் மாடல் விளங்குகின்றது.

ட்ரையம்ப் போனிவில் த்ரக்ஸ்டன் R

ட்ரையம்ப் போனிவில் T120 பைக்கில் இருந்து சற்று கூடுதலான வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பான பியராலோ டிப்போலோ ரோஸா டயர் அலுமினிய ஸ்வின்கிராம் , புகைப்போக்கில் பிரஸ்டூ ஸ்ட்யின்லெஸ் ஸ்டீல் போன்றவை ஆகும்.

ட்ரையம்ப் போனிவில் வரிசை பைக்குகள் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ளது.

2016 All New Triumph Bonneville range revealed

Exit mobile version